இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, ராணியின் விலைமதிப்பற்ற கிரீடம் யாருக்கு செல்லும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்தியாவின் கோஹினூரில் எடுக்கப்பட்ட வைரம் பொறுத்தப்பட்டுள்ள ராணி எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1851 ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவிற்காக இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இங்கிலாந்து ராணியின் இந்த கிரீடம் மிகவும் பிரபலானது, இதில் விலை மதிப்பற்ற 2 ஆயிரத்து 800 வைர கற்கலால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த கிரீடத்தின் மையத்தில் 21 கிராம் எடைகொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரம் 1937 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரித்து வந்தது. இங்கிலாந்து ராணிகள் அரசின் முக்கிய நிகழ்ச்சிகளில் இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்துக் கொள்வது வழக்கம்.
இதற்கிடையில், எலிசபெத் ராணி நேற்று உயிரிழந்தையடுத்து கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்ட கிரீடம், எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக 73 வயதான சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ராஜாவானதையடுத்து அவரது மனைவி கமிலா ராணியாகியுள்ளார்.
இதன்மூலம் விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்ட கிரீடம் கமிலாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…