Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Bill Gates About cryptocurrency: கிரிப்டோ கரன்சி குறித்து ரகசியம் உடைத்த பில்கேட்ஸ்..!

madhankumar May 23, 2022 & 17:22 [IST]
Bill Gates About cryptocurrency: கிரிப்டோ கரன்சி குறித்து ரகசியம் உடைத்த பில்கேட்ஸ்..!Representative Image.

Bill Gates About cryptocurrency: உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி என்பது மிக பிரபலமாக வளர்ந்து வருகிறது. மெய்நிகர் நாணயம் என அழைக்கப்படும் இந்த கிரிப்டோ கரன்சியை கண்களால் பார்க்கவோ, கைகளால் பரிமாற்றம் செய்யவோ முடியாது, இந்த அபான பரிமாற்றம் இணையவெளியில் மட்டுமே நடக்கும்.

பொதுவாக கிரிப்டோ கரன்சியில் பல வகைகள் உண்டு, எத்தேரியம், டெதர், கார்டனோ, இ.டி.எச்., மேட்டிக், எல்டிசி, டாட், சோல் இவை அனைத்தும் கிரிப்டோ கரன்சிகள் ஆகும். இதில் குறிப்பாக உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் கிரிப்டோ கரன்சியை பிரபலமானது, பிட் காயின், இதன் மீது முதலீடு செய்யும் நபர்களுக்கு பெரும் லாபம் கிணடைகிறது சில சமயம் எதிர்பாராத நஷ்டமும் ஏற்படத்தான் செய்யும். உலக அளவில் இதற்கென சட்ட விதிகள் என்று எதுவும் இல்லாமலே இந்த பண பரிமாற்றம் என்பது நடந்துவருகிறது.

கிரிப்டோவில் ஏன் முதலீடு செய்யவில்லை பில்கேட்ஸ் விளக்கம்:

உலக அளவில் முதல் 10 கோடிஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இவர் சமீபத்தில் நான் இதுவரை கிரிப்டோ கரன்சியை ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை என கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அதற்கு காரணமாக அவர், பொதுவாக நான் முதலீடு செய்யும் பணத்திற்கு நல்ல மதிப்பை கொடுக்கும் வகையில், சிறந்த பலன்களை கொடுக்கும் விஷயங்களில் முதலீடு செய்யவே விரும்புகிறேன். 

மேலும் நிறுவனங்களின் மதிப்பு அவர்கள் எவ்வாறு சிறந்த தயாரிப்புகளை கொண்டுவருகிறார்கள் என்பதை பொறுத்து உயருகிறது. ஆனால் இந்த கிரிப்டோவின் மதிப்பு மற்றவர்கள் எந்த அளவிற்கு இதனை வாங்குகிறார்கள் என்பதை பொறுத்து இதன் மதிப்பு அதிகரிக்கிறது என கூறியுள்ளார். எனவே மற்ற முதலீடுகளை போல இதில் முதலீடு செய்ய எனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்