Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெப் சீரிஸில் ஆபாசமாக நடித்தது ஏன்?-நடிகை தமன்னா விளக்கம்...!

Baskarans Updated:
வெப் சீரிஸில் ஆபாசமாக நடித்தது ஏன்?-நடிகை தமன்னா விளக்கம்...!Representative Image.

வெப் சீரிஸில் ஆபாசமாக நடித்தது குறித்து நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார்.

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இவர் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த படிக்காதவன், பையா, வீரம், வேல் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளனர்.

தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 15ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தம்னனா, ரூ.4கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரீஸ்' வெப் சீரியஸில் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டது. இதேபோல் ஜீ கர்தா தொடரிலும், நடிகர் சுஹைல் நய்யாருடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், பள்ளிப்பருவ காதலை அந்த தொடரில் கூறுவதால், சில இடங்களில் நெருக்கமான காட்சிகள் தேவைப்பட்டது. இணையர்களுக்குடான கதைகளில் இதுமாதிரியான காட்சிகள் தவிர்க்க முடியாதவை.  அதனால் தான் நடிக்க முடிந்தது என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்