Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Happy Parent’s Day 2022: பெற்றோர் தினம் எதுக்கு  கொண்டாடப்படுகிறது..??

Nandhinipriya Ganeshan July 24, 2022 & 13:30 [IST]
Happy Parent’s Day 2022: பெற்றோர் தினம் எதுக்கு  கொண்டாடப்படுகிறது..??Representative Image.

Happy Parent’s Day 2022: நம் பெற்றோர் நம் மீது வைத்திருக்கும் அன்பு, நம்பிக்கை, மற்றும் தியாகங்களை கொண்டாட வேண்டிய நாள் இது. ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை தேசிய பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த சிறப்பான நாள் இவ்வாண்டு ஜூலை 24 ஆம் தேதி வந்துள்ளது. இந்த பெற்றோர் தினம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கும் தந்தை, தாய் மற்றும் பிள்ளைகளுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கவே கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த நாளில் மட்டும் தான் பெற்றோர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்று கிடையாது. அவர்கள் நமக்காக செய்த தியாகங்களுக்கு நாம் வாழ்நாள் முழுவதும் அவர்களை மகிழ்வித்தாலும் ஈடாகாது.

ஒரு தாய் குழந்தையை 10 மாதம் தன்னுடைய வயிற்றில் சுமக்கிறாள். அந்த 10 மாதத்தில் ஒவ்வொரு நொடியும் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவே அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக்கொள்கிறாள். குழந்தையை பெற்றெடுக்கும் போதும் மறுபிறவி எடுக்கிறாள். அந்த சமயத்தில் கூட எனக்கு எதுவாயினும் பரவாயில்லை தன்னுடைய குழந்தை நலமுடம் பிறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றை கிழித்து குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தை பிறந்த நொடியில் தன்னுடைய அனைத்து ஆசப்பாசங்களையும் மறைத்து, குடும்ப சுமையை சுமக்க தொடங்குகிறான் தந்தை. வாழ்க்கையில் எத்தனை கஷ்டம் வந்தாலும் தன்னுடைய குழந்தையின் சிரிப்பை பார்த்து மறக்கிறான்.

எவ்வளவு வறுமையாக இருந்தாலும் தன்னுடைய குழந்தையை இளவரசனாக, இளவரசியாகவே வளர்கிறார்கள் நம் பெற்றோர்கள். நம்முடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் நம்மைவிட அதிகம் கொண்டாடுபவர்கள் இவர்களே. இப்படி தனது வாழ்க்கையையே நமக்கு அர்பணித்த இவர்களை தினமும் மகிழ்விப்பதில் நாம் ஒருபோதும் குறைந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்லாமல், அவர்களை எக்காரணத்திற்காகவும் வெறுத்துவிட கூடாது. நம்மை இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவந்த அவர்களுக்கு நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று அவர்களுக்கு தெரியாதா.. அவர்களை எப்போதும் நேசியுங்கள், பாசம் காட்டுங்கள். அனைவரது வீட்டிலும் இருக்கும் தெய்வங்கள் இவர்கள்.

அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்து செல்வது, பரிசுகள் கொடுப்பது, குடும்பமாக அமர்ந்து மனம் திறந்து பேசி மகிழ்வது என பெற்றோர் தினத்தை கொண்டாடலாம். பெற்றோர்களை மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்று கிடையாது. பெற்றோர் ஸ்தானத்தில் உங்களின் மீது அன்பாக இருப்பவர்களையும் கொண்டாடும் நாள் இது.

Tags:

Happy Parent’s Day 2022 | Why we celebrate parents day | When we celebrate parents day | When we celebrate parents day in 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்