Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

உலக மிதிவண்டி தினம் 2023 கொண்டாடுவதற்கான காரணம் மற்றும் சிறப்பு | World Bicycle Day 2023

Priyanka Hochumin Updated:
உலக மிதிவண்டி தினம் 2023 கொண்டாடுவதற்கான காரணம் மற்றும் சிறப்பு | World Bicycle Day 2023Representative Image.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 'உலக மிதிவண்டி தினம்' ஜூன் மாதம் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு எதிராக பல சீற்றங்களை வெளிப்படுத்தும் பைக், கார், பஸ் ஆக்கியவற்றில் இயற்கைக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது மிதிவண்டி தான். சரி எந்த காரணத்திற்காக இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம் என்று தெரிஞ்சிக்கலாம்.

இத்தினம் கொண்டாட காரணம்?

அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் லெஸ்ஸெக் சிபில்ஸ்கி என்பவர் 2015 ஆம் ஆண்டு சைக்கிள் மற்றும் அதன் வளர்ச்சிகள் பற்றி ஆராய தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார். அதன் பின்னர் அவரின் திட்டம் 'அனைவருக்கும் நிலையான இயக்கம்' ஆதரவுடன் மிகப்பெரிய இயக்கமாக மாறியது. அத்துடன் தனது பணியை நிறுத்தாமல் தனது  சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். 

எனவே, இது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டப்பட்டது. அதில் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த சைக்கிளின் தனிச்சிறப்பு, பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத கருவி என்பதை முழுமையாக அங்கீகரித்தனர். பின்னர் ஏப்ரல் 12, 2018 அன்று, ஜூன் 3 ஆம் தேதியை உலக சைக்கிள் தினமாக அறிவிக்கும் தீர்மானம் ஐநா பொதுச் சபையின் 193 உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தை துர்க்மெனிஸ்தான் மட்டும் அல்லாது 56 நாடுகளால் இணை அனுசரணை வழங்கப்பட்டது.

சிறப்பு

வயது, பாலினம் என்று எந்த வித்தியாசமும் இன்றி சைக்கிளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்