Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Driver sharmila: ம.நீ.ம கட்சியில் சேரும் எண்ணம் இல்லை..! - கோவை இளம் ஓட்டுநர் ஷர்மிளா பேட்டி

Chandrasekar Updated:
Driver sharmila: ம.நீ.ம கட்சியில் சேரும் எண்ணம் இல்லை..! - கோவை இளம் ஓட்டுநர் ஷர்மிளா பேட்டி Representative Image.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் இளம்பெண் ஷர்மிளா தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்த்திற்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில், 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கோயம்புத்தூர், தென் சென்னைமதுரை ஆகிய பாராளுமன்றத்  தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பதுமணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப இந்தியப் பிரதமர் அங்கு நேரில் சென்று சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும், மக்கள் நீதி மய்யம் கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்டச் செயலாளரை  நியமிப்பது, ஜனநாயகப் பண்போடு ஆளுநர் பணியாற்ற வலியுறுத்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Driver sharmila: ம.நீ.ம கட்சியில் சேரும் எண்ணம் இல்லை..! - கோவை இளம் ஓட்டுநர் ஷர்மிளா பேட்டி Representative Image

இதைத் தொடர்ந்து, கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு நடிகரும், ம.நீ.ம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கார் சாவியை வழங்கினார். அதேபோல், சேலத்தில் நடந்த விபத்தில் குடும்பத்தினரை இழந்து தவிக்கும் இளம்பெண் அமுதாவிற்கு, படிப்பிற்காக 3 லட்சத்திற்கான காசோலையை அவர் வழங்கினார்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஷர்மிளா, கமல் அவரது கையால் எனக்கு கார் சாவியயை வழங்கினார். மகிழ்ச்சியாக உள்ளது.  பஸ் வேண்டுமா? கார் வேண்டுமா? என கேட்டார். எடுத்தவுடன் பெரிதாக வேண்டாம் என நினைத்தேன். வசதியாக இருக்க வேண்டும் என கமல் சார் ஒரு கார் தருவதாகக் கூறினார், அதே காரை வாங்கியதில் மகிழ்ச்சி.

கீழே விழுந்தால் அடுத்து எழுந்து நடக்க வேண்டும் எனவும், ஒரு தொழில் முனைவோராக  என்னை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும் கமல் எனக்கு அறிவுரைகளை வழங்கினார்.  அரசு வேலையயை எதிர்பார்த்து நான் எதையும் செய்யவில்லை. எனது ஆசை, கனவு எல்லாமே பஸ் ஓட்ட வேண்டும் என்பது மட்டுமே. அதை நோக்கி மட்டுமே பயணித்தேன் அவ்வளவு தான், என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சேர்ந்து பயணிக்கும் எண்ணம் உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஷர்மிளா, அப்படி எந்த எண்ணமும் கிடையாது. இந்த நிகழ்ச்சிக்காகக மட்டுமே இங்கு வந்தேன் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்