Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

World Chocolate Day 2022: உலக சாக்லேட் தினம் இன்று…! சாக்லேட் டெய்லியும் சாப்பிடுறோம்…! ஆனால், ஏன் இந்த நாள சாக்லேட் தினமா சொல்றாங்க….

Gowthami Subramani [IST]
World Chocolate Day 2022: உலக சாக்லேட் தினம் இன்று…! சாக்லேட் டெய்லியும் சாப்பிடுறோம்…! ஆனால், ஏன் இந்த நாள சாக்லேட் தினமா சொல்றாங்க….Representative Image.

World Chocolate Day 2022: திண்பண்டங்களில் ஒன்றாக விளங்கும் சாக்லேட்டை, ஒரு சிலர் உணவுப் பொருளாகவே மாற்றிக் கொள்வர். எப்படி உணவாக மாற்றிக் கொள்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறதா..? சாக்லேட்டை அதிக அளவில் சாப்பிடும் நபர்கள், உணவு எடுத்துக் கொள்வதை மறந்து விடுகிறார்கள். குழந்தைகள் முத்ல பெரியவர்கள் உட்பட அனைவருமே விரும்பிச் சாப்பிடும் திண்பண்டங்களில் சாக்லேட் உள்ளது. இதனைச் சாப்பிடும் போது ஏற்படும் உணர்வு இருக்கிறதே, அது வேறு எந்த திண்பண்டம் சாப்பிட்டாலும் கிடைக்காது.

சாக்லேட் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

சாக்லேட்டை எல்லோரும் எல்லா நாள்களிலுமே விரும்பிச் சாப்பிடுகிறோம். ஆனால், குறிப்பாக ஏன் இந்த ஜூலை மாதம் 7 ஆம் நாள் சர்வதேச சாக்லேட் தினமாகக் கொண்டாடப்படுகிறது தெரியுமா..? கிட்டத்தட்ட 450 வருடங்களுக்கு முன், அதாவது 1550 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் நாள் ஐரோப்பியர்களால், சாக்லேட்டுகள் உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றன. இதன் காரணமாகவே, இன்றைய தினம் சாக்லேட் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆரம்ப காலத்தில்

சாக்லேட்டுகள் இன்றைய கால கட்டத்தில் தயாரிப்பது போல, ஆரம்ப காலத்தில் இல்லையாம். கோக்கோ விதையிலிருந்து தான் சாக்லேட்டுகள் உருவாகிறது. ஆரம்ப காலத்தில், இந்த கோக்கோ விதையிலிருந்து பெறப்பட்டவற்றை குடிக்கிற பானமாகத் தயாரித்து கூழாக்கி குடித்துக் கொண்டிருந்தனர். மேலும், இது ராஜாக்களின் விருந்துகளில் முக்கிய உணவாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும், சாக்லேட்டை அதன் விதைகளிலிருந்து நேரடியாக எடுத்துச் சாப்பிட முடியாத காரணத்தினால், அதனைத் தேன், பழம் உள்ளிட்ட பொருள்களோடு இணைத்து சாப்பிட ஆரம்பித்தனர்.

ஆரோக்கியத்திற்கும் பயன்படும் சாக்லேட்டுகள்

ஆரம்ப காலத்தில் கூழாக தயாரித்து, சாப்பிட்டு வந்த சாக்லேட்டுகள், இன்று வித விதமாகப் பல்வேறு தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏராளக்கணக்கான சாக்லேட்டுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இது சுவைக்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. மேலும் சாக்லெட்டில் கோக்கோ சேர்க்கப்படும் அளவைப் பொறுத்து வெவ்வேறு வகையான சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அதிக அளவிலான கோக்கோ இருக்கக்கூடிய சாக்லேட்டுகள் டார்க் சாக்லேட்டுகள் ஆகும். மேலும், மில்க் சாக்லேட்டில் குறைந்த அளவிலான கோக்கோ இருக்கும். பால் கலரில் இருக்கும் சாக்லேட்டுகளில் கொக்கோ சேர்க்கப்பட்டிருக்காது. இந்த கொக்கோ சேர்க்கப்படாத சாக்லேட்டுகள் பால், சர்க்கரை, கோக்கோ பட்டர் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

World Chocolate Day 2022 | World Chocolate Day | Reason for Celebrating World Chocolate Day | India Chocolate Day 2022 | Chocolate Day Images 2022 | Chocolate Day status | Chocolates Made in India | Indian Chocolate Brand Chocolate | Chocolate Lover


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்