Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று.. | World Environment Day 2023

Nandhinipriya Ganeshan Updated:
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று.. | World Environment Day 2023Representative Image.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. நம் உலகமும், எதிர்கால சந்ததியினரும் நலமுடன் இருப்பதற்காக சுற்றுச்சூழலை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு 1974 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சூரிய குடும்பத்திலேயே பூமியில் மட்டும் தான் உயிரினங்கள், இயற்கை வளங்கள் நிறைந்திருக்கின்றன. இவை அனைத்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்க வேண்டும். ஆனால், நாமோ நவீன விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொழில்துறை வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை பெரிய அளவில் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறோம். இவை, சுற்றுச்சூழலை மட்டுமன்றி உயிரினங்களின் வாழ்வுக்கும், இயற்கை வளங்களுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.

இதனால்தான் கடும் வெள்ளம், சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டால் வளிமண்டலத்தில் பாதிப்படைந்து வருகிறது. இதனால், சூரிய ஒளி அதிகரித்து பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படி வரிசையாக எத்தனையோ சுற்றுச்சூழல் பாதிப்புகள் இருக்கின்றன. இவற்றால், பாதிக்கப்படப்போவது எதிர்கால சந்ததியினர்கள் தான். அதனால், முடிந்தவரை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை தவிர்க்க முயற்சிப்போம். நாமும் நலமுடன் வாழ்வோம்! எதிர்கால சந்ததியினரையும் வாழ வைப்போம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்