Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

உலக உடல் உறுப்பு தான தினம் 2023: நாம் இறந்த பின்பும் உடல் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்…!

Gowthami Subramani August 11, 2023 & 15:40 [IST]
உலக உடல் உறுப்பு தான தினம் 2023: நாம் இறந்த பின்பும் உடல் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்…!Representative Image.

உலக உடல் உறுப்பு தான தினம் 2023: நமது வாழ்நாளில் எல்லோரும், தானம் என்று பொன், பொருள், நிலம் என ஏராளமானவற்றை வழங்கியிருப்பதைக் குறிப்பிடுகிறோம். அதனைத் தொடர்ந்து, ஒருவரின் உயிர் காக்கும் விதத்தில் இரத்த தானத்தை அளித்திருக்கிறோம். இதனையடுத்து, கண், இதயம், சிறுநீரகம் என தொடர்ந்து உடல் உறுப்புகளைத் தியானமாக வழங்குகிறோம். இவற்றை எல்லாம் தாண்டி, தேக தானம் என்ற தானமும் உள்ளது. இந்த தானத்தில் ஒருவர் இறந்த பிறகு, அவரின் முழு உடலையும் அப்படியே தானமாக வழங்குவதாகும்.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த நிலையிலும், உடல் உறுப்பு தானங்களைச் செய்ய முன்வருவதில் ஒரு சில பேர் மக்கள் தயக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள் உலக உடல் உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது.

மண்ணுக்கு வீணாவது

ஒருவர் இறந்த பிறகு, அவரது உடலை மண்ணுக்கு இரையாக்குவதை விட, உடல் உறுப்பு பிரச்சனைகளுடன் இருக்கும் மற்றவர்களுக்குத் தந்தால் அவர்களின் உயிரைக் காப்பாற்றியவாறு அமையும். நம் நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 2 லட்சம் மக்கள் விபத்துக்குள்ளாவதுடன் மூளைச்சாவு நோய்க்கு ஆளாகின்றனர். அது மட்டுமல்லாமல், கிட்னி, நுரையீரல், கல்லீரல், இருதயம் போன்றவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டு செயல்படாமல் போகின்றன.

தானமாக வழங்குதல்

இப்படி, மண்ணுக்கு வீணாகச் செல்லக்கூடிய உறுப்புகளை, வாழ்வதற்காக காத்திருக்கும் பிரச்சனைகளுடன் கூடிய உடல் உறுப்புகளைக் கொண்ட மக்களுக்கு அளித்து அவர்களைக் காப்பாற்றலாம். இவ்வாறு உடல் உறுப்புகளைத் தானம் தருவதன் மூலம் இறந்தவர்களை உயிருடன் காண்பது போல தோன்றும்.

மூளைச்சாவு ஏற்பட்டவரிடம் இதயத்தை தானம் செய்யலாமா?

ஒருவருக்கு விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டதெனின், அவர்களது இதயம் துடித்துக் கொண்டு தான் இருக்கும். மெதுவாக இரத்த அழுத்தம் குறைந்து வரும். இவ்வாறு அப்படியே விட்டால் 2 அல்லது 3 நாள்களில் உடலின் அனைத்து உறுப்புகளும் செயலிழந்து விடும்.

அதற்கு முன்னரே, மூளைச்சாவு ஏற்படுத்த உறுதிபடுத்த 10 முதல் 15 வகையான பரிசோதனை நடைபெறும். இந்தப் பரிசோதனைகளை உறுதி செய்த பின்னரே, மூளை சாவு ஏற்பட்டவரின் உறுப்புகள் தானமாக வழங்குவதற்கான அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஒரு உயிரைக் காப்பாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பது நம் எல்லோரும் அறிந்ததே..!

உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம்

மருத்துவர்களின் அறிவுரைப்படி, மூளைச்சாவு அடைந்த ஒரு நபரின் உடலிருந்து பெறப்படும் இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், குடல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் அனைத்தையும் பெற முடியும். அதன் படி, ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்யும் போது, குறைந்தபட்சம் 8 பேரையும், அதிகபட்சமாக 75 பேரையும் காப்பாற்ற முடியும் எனக் கூறுகிறது.

நாம் இறந்த பிறகும் மற்றவரின் உயிரைக் காப்பாற்றுவதே இந்த உடல் உறுப்பு தானம். நம் உயிர் மறைந்தாலும், உடல் தானம் செய்வதன் மூலம் நாம் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்