கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதிக்கு அருகே பாலவிளை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், உள்ளூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வரும் வரன்களை தடுத்து நிறுத்துவதாக கோபமடைந்துள்ளனர். இங்குள்ள திருமணம் ஆகாத இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதாவது, திருமணத்தை தடுத்து நிறுத்துபவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுப்பதாக அந்த போஸ்டரில் உள்ளது.
அதில், “பாலவிளையில் ஓர் சந்திப்பு.. குறிப்பாக 4, 5 நபர்களுக்கு மட்டும்.. ஊரில் வரும் திருமண வரன்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு.. தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும். குறிப்பு- சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதை ஒட்டியது யார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…