Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு....ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு..!

madhankumar June 16, 2022 & 14:37 [IST]
மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு....ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு..!Representative Image.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் "அக்னி பாத்" திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பாதுகாப்பு துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலை வாய்ப்பு துறையை மத்திய அரசு உருவாகியுள்ளது. இந்த துறையில் இளைஞர்கள் தற்காலிகமாக பணியில் சேரும் திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் மொத்தமாக 45 ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் எனவும், இவர்களுக்கான வயது வரம்பு 17.5 முதல் 21 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கான 4 வருட பணியில் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகாரில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில், டயர்களை எரித்தும் வன்முறைகளில் ஈடுபட்டும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்