Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

Crime : BSNL நெட்வொர்க்கை ஹாக் செய்த வாலிபர் கைது..?

Muthu Kumar June 05, 2022 & 14:09 [IST]
Crime : BSNL நெட்வொர்க்கை ஹாக் செய்த வாலிபர் கைது..?Representative Image.

Crime : சென்னையில் சட்டவிரோதமாக BSNL நெட்வொர்க்கை ஹாக் செய்த கேரள வாலிபரை காவல்துரையினர் கைது செய்தனர்.

சென்னையில் கடந்த 15 நாட்களில் 72 லேண்ட்லைன் இணைப்புகளில் இருந்து சுமார் 15,000 அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், சென்னை தொலைபேசியின் சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும்  சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, BSNL-லின் சென்னை தொலைபேசி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்னை நைனார் குப்பம் பகுதியில் காவல் துறையினரின் உதவியுடன்  திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், அப்பகுதியில் உள்ள வீட்டில் 7 சிம் கார்டு பெட்டிகளை கைபற்றினர். அதில் ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள 32 சிம் கார்டுகள் செயலாக்கும் திறனுடையதாக இருந்துள்ளது. மேலும், அந்த வீட்டில் வசிக்கும் நபர் சட்டவிரோதமாக டவரில் இருந்து சிக்னல் ஹாக் செய்து டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்தி வருதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, டவரில் இருந்து சிக்னல் ஹாக் செய்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்ர்த விசாரணையில் அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த நாபல் என்பவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் , அவர் மோசடியில் ஈடுபடுவதற்காக சென்னை கானத்தூர் நைனார் குப்பம் பகுதியி வாடகை வீடு ஒன்று எடுத்து அதில் தங்கியுள்ளார்.

மேலும், இந்த நபர் பிரபல நிறுவனங்களை ஏமாற்றி அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியுள்ளார். மேலும், இத்ற்காக 224 வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். மேலும், அவர் பதிவு செய்த அனைத்து நம்பர்களும் போலி ஆதார் அட்டை மற்றும் போலி முகவரிச் சான்றிதழை பயன்படுத்தி வாங்கப்பட்டது தெரியவந்தது.

இதன் மூலம் தனது வீட்டிலேயே சிறிய அளவிலான டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் உருவாக்கி அதன் மூலம் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியுள்ளார். இதற்காக பிரத்தியக ரூட்டரை வைத்து நெட்வெர்க்கை திருடி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்த மோசடியில் மேலும் யாருக்கு தொடர்பு உள்ளது உட்பட பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்த கானத்தூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அனீஸ் உட்பட பலரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்