Tue ,Jun 18, 2024

சென்செக்ஸ் 77,276.33
283.56sensex(0.37%)
நிஃப்டி23,545.05
79.45sensex(0.34%)
USD
81.57
Exclusive

பீர் பாட்டிலால் முகத்தை கிழித்த கொடூரம்.. இளம்பெண்ணுக்கு 25 தையல்.. குற்றவாளி சொன்ன பகீர் காரணம்..

Nandhinipriya Ganeshan November 18, 2022 & 11:27 [IST]
பீர் பாட்டிலால் முகத்தை கிழித்த கொடூரம்.. இளம்பெண்ணுக்கு 25 தையல்.. குற்றவாளி சொன்ன பகீர் காரணம்..Representative Image.

கேரள மாநிலம் ஆம்பூரி அருகே கர்த்தனக்கல் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான சோனு சோஜப். இவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு லேபஸ் ரெஸ்டாரண்டில் 3 மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்துள்ளார். அதனால், கீழ்ப்பாக்கம் பகுதியிலேயே ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு சோனு ஜோசப், டியூட்டி முடித்துவிட்டு, ஹாஸ்டல் ரூமுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சோனு ஜோசப்பை திடீரென வழிமறுத்து, தன்னை காதலித்து, திருமணம் செய்து கொள்ளும்படி நடுரோட்டிலேயே தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ந்து போன சோனு ஜோசப், அந்த நபரின் காதலை ஏற்க மறுத்துவிட்டு, வேகவேகமாக ஹாஸ்டலுக்கு செல்ல, இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் மறுபடியும் சோனு ஜோசப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். 

பின் கோபத்தில் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் சோனு ஜோசப்பின் முகத்தில் அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்து போன அந்த பெண், மயக்கம் போட்டு சாலையில் விழுந்துள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராத அந்த இளைஞர், உடைந்த பீர் பாட்டிலால் சோனு சோஜப் முகம், வயிறு, மார்பு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி குத்தி கிழித்துள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர் அலறி, உதவி கேட்டு கத்தியதால், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

பின்னர் சோனு ஜோசப்பை பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சோனு ஜோசப்பிற்கு முகத்தில் மட்டும் 25 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்த இளைஞர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கினர்.

அதன்படி, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் அந்த இளைஞரின் செல்போன் சிக்னல் ஆராயப்பட்டு, அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த இளைஞரை கைது செய்து விசாரித்ததில், அந்த இளைஞர் சென்னையை சேர்ந்த நவீன் என்று தெரிய வந்தது. சோனு ஜோசப்பிற்கு, நவீனுக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்துள்ளது. அப்போது, நவீன் கடற்படையில் வேலை செய்வதாக கூறி அப்பெண்ணை ஏமாற்றவே, இருவருக்கும் இடையே கடும்வாக்கும் ஏற்பட்டு, சோனு ஜோசப் நவீனுடன் பேச மறுத்துள்ளார்.


மீறி தொந்தரவு செய்தால் போலீஸில் புகார் அளித்துவிடுவிதாக சோனு சொல்லிருக்கிறார். இது குறித்து கூறிய நவீன், சோனு ஜோசப் ஏர்வோஸ்டஸ் பெண்ணாக வேலையில் சேர வேண்டும் என்று சில மாதங்களாக படித்து வருகிறாராம். வேலை கிடைக்கும் என்ற திமிரில் தன்னை கழட்டிவிட்டதாக நினைத்துள்ளார். மேலும், அழகு இருந்தால் தானே ஏர்வோஸ்டஸ் ஆக முடியும், அதனால் தான் முகத்தை கிழித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்