Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

90s Kids Favorite Flower: 90'ஸ் கிட்ஸ்களின் பள்ளிப் பருவத்தை அழகாக்கிய பூக்கள்... நினைவிருக்கா...?

Nandhinipriya Ganeshan July 04, 2022 & 19:00 [IST]
90s Kids Favorite Flower: 90'ஸ் கிட்ஸ்களின் பள்ளிப் பருவத்தை அழகாக்கிய பூக்கள்... நினைவிருக்கா...?Representative Image.

90s Kids Favorite Flower: நாம் வாழ்க்கையின் மிகவும் அழகான, கவலையின்றி சுதந்திரமாய் பட்டாம்பூச்சி போன்று சுற்றி திறிந்த காலம் எது என்று சொன்னால் பள்ளிப் பருவம் தான். நம்மில் பலருக்கும் இப்பவும் அந்த தருணத்தை நினைத்துப் பார்த்தால் கண்கள் கலங்கும். எந்த கவலையும் இன்றி, ஓடி ஆடி விளையாடிய காலம். அதுவும் 90'ஸ் கிட்ஸ்களின் பள்ளிப் பருவம் வேற லெவல். 

பள்ளிக்கூடம் செல்லும் போது நாம் அனுபவித்த அந்த சந்தோஷங்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் நாம் இப்போது நினைத்தாலும் கூட திரும்ப செல்ல முடியாது. பள்ளிப்பருவத்தில் 90ஸ் கிட்ஸ்களின் நிறைய அழகான நினைவுகள் புதைந்து இருக்கின்றன. அதில் ஒன்றை தான் பார்க்கப் போகிறோம்.

இந்த காலத்து பெண் பிள்ளைகள் பூ வைப்பதற்கு கூட யோசிக்கிறார்கள். ஆனால், அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் இரட்டை ஜடை போட்டுக் கொண்டு விதமான விதமான பூக்களை வைத்துக் கொண்டு ஸ்கூலுக்கு போகும் அழகே தனி தாங்க. பன்னீர் ரோஸ், டிசம்பர் பூ, செவ்வந்தி பூ, கனகாமர பூ, சூரிய காந்தி பூ, ஏற்காட்டு பூ, காக்கட்டான் பூ, மல்லிகை பூ போன்ற பூக்களை தலையில் வைத்து அழகு பார்ப்பார்கள். 

இந்த பூக்கள் எல்லாம் வாசனை இல்லாவிட்டாலும் அழகில் குறைந்தது இல்லை.  ஆனால், இந்த காலத்தில் வித விதமான பூக்கள் இருந்தாலும், அந்த பூக்களுக்கு ஈடாகாது. இதில் வருத்தம் அளிக்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த பூக்களை வைத்து அழகு பார்த்த கடைசி தலைமுறை நாம் தான்.

இதை நினைக்கும் போது ஒருபுறம் கவலையாக இருந்தாலும், மறுபுறம்  சந்தோசமாகவும் இருக்கிறது.

இந்த பதிவு உங்களுடைய பள்ளிப் பருவத்தை நினைவிற்கு கொண்டு வரும் என்று நம்புகிறேன். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள். 

Tags:

90s Kids Favorite Flower | 90s Childhood Memories


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்