Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கோடைக்காலத்தில் வீட்டிலேயே கேசத்தை பராமரிப்பது எப்படி | How to take care of hair at home in summer

Vaishnavi Subramani Updated:
கோடைக்காலத்தில் வீட்டிலேயே கேசத்தை பராமரிப்பது எப்படி | How to take care of hair at home in summer  Representative Image.

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டலே நம் உடலில் உஷ்ணம் என்பது மிகவும் அதிகமாக இருக்கும். நம் உடலில் உள்ள கேசம் மற்றும் முகத்தைப் பாதுகாப்பாக வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதிலும் வெயிலில் செய்யும் வேலை என்றால் நம் முகம் மற்றும் கேசத்தைப் பராமரிப்பது மிகவும் கடினம். அதனால் கோடைக்காலத்தில் கேசத்தைப் பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடைக்காலத்தில் வீட்டிலேயே கேசத்தை பராமரிப்பது எப்படி | How to take care of hair at home in summer  Representative Image

கோடைக்காலத்தில் கேசத்தைப் பராமரிக்கும் முறைகள்

கேசத்திற்கு மாஸ்க்(Hair mask)

அதிகளவில் வெயிலில் செல்லாபவராக இருந்தால் உங்களுக்கு கேசத்தைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்த முறை மூன்று பொருள்கள் மூலம் செய்யலாம்.

கோடைக்காலத்தில் வீட்டிலேயே கேசத்தை பராமரிப்பது எப்படி | How to take care of hair at home in summer  Representative Image

நல்லெண்ணெய்

 ✤ இதில் உடைந்த முடிகள் மற்றும் வெடித்த முடிகள் போன்றவை சரிசெய்வதற்கு முதலில் முடி நீளத்திற்கு ஏற்ப நல்லெண்ணெய் மற்றும் கிளிசரின், முட்டையின் மஞ்சள் கரு எடுத்துக் கொள்ளவும்.

 ✤ அதை நன்றாகக் கலந்து கொள்ளவும். மஞ்சள் கரு வாசனை பிடிக்கவில்லை என்றால் அதில் சிறிதளவு நறுமண எண்ணெய் கலந்து கொள்ளவும்.

 ✤  அதை நன்றாக முடியில் தேய்த்துக் கொள்ளவும். அரை மணிநேரம் ஊற விடவும். அதில் உள்ள வைட்டமின்கள் முடியில் இறங்கும்.

 ✤ அரை மணிநேரத்திற்குப் பிறகு, அதை ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் போதும். முடி மிகவும் கருமையாகவும் மற்றும் உடைந்த முடிகள் சரியாகும் மற்றும் மென்மையாகவும் மாறும்.

கோடைக்காலத்தில் வீட்டிலேயே கேசத்தை பராமரிப்பது எப்படி | How to take care of hair at home in summer  Representative Image

பால்

 ✤ பால் என்பது பல வைட்டமின்களை கொண்டது. அதனைப் பயன்படுத்திப் பொலிவு இழந்த கூந்தல் மற்றும் மென்மைதன்மை இழந்தும் மற்றும் கூந்தலின் வளர்ச்சி குறைந்த முடிகள் போன்றவை இந்த முறையில் சரி செய்யலாம்.

 ✤ முடியில் ஷாம்பு தேய்த்து அலசியதும் காய்ச்சாத பால் எடுத்து முடியில் தேய்த்து 7 நிமிடங்கள் ஊறவிடவும்.

 ✤ அதற்குப் பின், வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். பால் வாசம் முடியிலிருந்து வந்தால் வாசனையான எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்.

 ✤ இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் பளபளப்பான கூந்தல் மற்றும் கூந்தல் பொலிவுடனும், ஊட்டச்சத்துகள் மிகுந்தவையாக மாறும்.

கோடைக்காலத்தில் வீட்டிலேயே கேசத்தை பராமரிப்பது எப்படி | How to take care of hair at home in summer  Representative Image

முட்டை

 ✤ அதிகளவில் வெயிலில் செல்லவதால் கேசம் முழுவதுமாக பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த முறை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்ட கேசத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பளபளப்பாகவும் ஊட்டச்சத்து மிகுந்த கேசம் ஆக மாற்றவும் உதவும்.

 ✤ முதலில் ஒரு கப் அளவிற்குப் பால் எடுத்துக் கொண்டு அதில் ஒரு முட்டை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.

 ✤ உச்சந்தலையிலிருந்தது கேசம் முழுவதுமாக தேய்த்துக் கொள்ளவும்.அதை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும்.

 ✤ 20 நிமிடங்களுக்குப் பின், கேசத்தை முழுவதுமாக அலசிக் கொள்ளவும். முட்டை வாசம் போகாமலிருந்தால் அதற்கு நறுமணம் தரும் எண்ணெய் பயன்படுத்தலாம்,

 ✤ இந்த முறை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவது நல்லது.இதனைச் செய்தால் வெயிலில் பாதிக்கப்பட்ட கேசத்தைத் திரும்பப் பெறுவதற்கும், பாதுக்காகவும் உதவும்.

கோடைக்காலத்தில் வீட்டிலேயே கேசத்தை பராமரிப்பது எப்படி | How to take care of hair at home in summer  Representative Image

கேசத்திற்கான சீரம்

 ✤ வெயிலில் பாதிக்கப்பட்ட கேசத்திற்கு சீரம் பயன்படுத்தி அதை மென்மையாகவும்,பொலிவுடனும் மற்றும் பளபளப்பாக மாற்றுவதற்கும் இந்த முறை உதவும்.இதில் இரண்டு முறை உள்ளது.

விளக்கெண்ணெய்

 ✤ கோடைக்கால வெயிலில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கூந்தல் மற்றும் பொலிவு இழந்த கூந்தல் போன்றவை இந்த முறையில் சரிசெய்யலாம்.

 ✤ ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு அதை நன்றாகக் கலந்து கொள்ளவும்.

 ✤ கலந்த எண்ணெய்யை நன்றாகக் காய்ச்சிக் கொள்ளவும். அந்த எண்ணெய்யை இரவு நேரத்தில் தேய்த்து நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.

 ✤ அதை மறுநாள் காலை நேரம் அலச வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம். சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் இந்த முறை வாரத்திற்கு  ஒரு முறை பயன்படுத்தலாம்.

கோடைக்காலத்தில் வீட்டிலேயே கேசத்தை பராமரிப்பது எப்படி | How to take care of hair at home in summer  Representative Image

பாதாம் எண்ணெய்

 ✤ வெயிலில் மிகவும் சேதமடைந்த கூந்தல் மற்றும் உடைந்த கூந்தல்,கருமை நிறம் இழந்த கூந்தல் போன்ற பிரச்சனை நிறைந்த கூந்தலை இந்த முறையில் சரி செய்யலாம்.

 ✤ முதலில் ஒரு முட்டையில் உள்ள மஞ்சள் கருவை எடுத்துக் கொண்டு அத்துடன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

 ✤ அதைத் தலையில் தடவி கொண்டு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை நன்றாக ஊறவிடவும்.

 ✤ அதற்குப் பிறகு, கூந்தலை ஷாம்பு கொண்டு அலசவும். முட்டை வாசம் அடித்தால் நறுமணம் தரும் எண்ணெய் சிறிதளவு சேர்த்து பயன்படுத்தலாம்.

 ✤ இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் கேசத்தை பாதுக்காகவும், கருமையாகவும் வைப்பதற்கு உதவும்.

கோடைக்காலத்தில் வீட்டிலேயே கேசத்தை பராமரிப்பது எப்படி | How to take care of hair at home in summer  Representative Image

கேசத்திற்கான ஸ்பிரே

 ✤ வெயிலில் செல்லும் போது பாதுகாப்பு தருவதற்கும்,வெயிலின் தாக்கம் குறைப்பதற்கும் மற்றும் கருமைநிறம் குறையாமல் இருப்பதற்கும் இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும்.

 ✤ முதலில் ஸ்பிரேபாட்டலில் லாவெண்டர் எண்ணெய் 6 முதல் 7 சொட்டுகள் சேர்த்து அத்துடன் தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

 ✤ வெயிலில் செல்வதற்கு முன் இந்த ஸ்பிரேயை கேசத்தின் முழுவதுமாக அடித்துக் கொண்டு சென்றால் வெயிலின் தாக்கத்தில் இருந்து கேசத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்