Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aatu Eeral Seivathu Eppadi: இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கும் ஆட்டு ஈரல்.. ஈரோடு ஸ்டைலில் செஞ்சி பாருங்க..!!

Nandhinipriya Ganeshan September 01, 2022 & 15:20 [IST]
Aatu Eeral Seivathu Eppadi: இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கும் ஆட்டு ஈரல்.. ஈரோடு ஸ்டைலில் செஞ்சி பாருங்க..!!Representative Image.

Aatu Eral Benefits in Tamil: அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஆட்டு ஈரலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, காப்பர், ரிபோபிளேவின், துத்தநாகம், செலினியம் என பல வகையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள நச்சு தன்மையை மட்டுப்படுத்தக் கூடியது. அதுமட்டுமல்லாமல், இரத்த சோகை இருப்பவர்கள் இதனை மாதம் இருமுறை உட்கொண்டால் விரைவில் இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு என்பதால் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. இப்போது, இந்த ஈரலை ஈரோடு ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான ஈரோடு ஈரல் வதக்கல் ரெசிபி!

தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈரல் - 1/4 கிலோ

மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை

சீரகம் - 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

மிளகு தூள் - 2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை - சிறிதளவு


அசத்தலான சுவையில் ருசியான பள்ளிபாளையம் சிக்கன்!


செய்முறை:

ஒரு வாணலியியல் தேவையான அளவு நல்லெண்ணய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியது பொடியாக நறுக்கி வைத்துள்ள ஈரல், மிளகு தூள், சீரகத் தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி மூடி வைக்கவும்.

அடிப்பிடிகாதவாறு இரண்டு முறை கிளறி கிளறி மூடி, ஈரலின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும். ஈரல் நீர்விடும் என்பதால் தண்ணீர் தேவையான அளவு மட்டும் ஊற்றினால் போதுமானது. 

இதோ சுவையான காரசாரமான ஈரோடு ஈரல் வறுவல் ரெடி. நறுக்கிய கொத்தமல்லி இலையை மேலே தூவி சூடாக பரிமாறவும். 

Tags:

aatu eral benefits in tamil, goat eral fry in tamil, goat liver benefits in tamil, goat liver nutrition, mutton liver fry benefits in tamil, mutton liver fry recipe in tamil, aatu eeral seivathu eppadi, aatu eeral varuval in tamil, mutton eeral recipe in tamil, mutton liver fry in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்