Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Foods To Treat Anemia: இரத்த சோகை பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள் என்னென்ன..?

Nandhinipriya Ganeshan June 26, 2022 & 14:30 [IST]
Foods To Treat Anemia: இரத்த சோகை பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள் என்னென்ன..?Representative Image.

Foods To Treat Anemia: இரத்த சோகை என்பது இரத்தத்தில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத ஒரு நிலையாகும். உணவில் இரும்புச்சத்து குறைப்பாட்டால் இந்நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் பெண்களே அதிகம் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்நோயை குணப்படுத்துவதற்கு ஒரே வழி இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது மட்டுமே.

இரத்த சோகை அறிகுறிகள்:

❖ மூச்சு திணறல்

❖ நெஞ்சு வலி

❖ தலைச்சுற்றல்

❖ ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

❖ கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்த நிலையில் இருப்பது

❖ தோல் மஞ்சள் மற்றும் வெளிர் நிறமாக தோன்றுவது.

இரத்த சோகை போக்க உதவும் உணவுகள்:

கீரைகள்: இரத்த சோகைக்கு பச்சை இலை காய்கறிகள் மிகவும் நல்லது. அந்த வகையில் இரும்புச்சத்து நிறைந்த கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த சோகை நோய் வராமல் தடுக்க முடியும். ஒருவேளை இருந்தாலும் குறையத் தொடங்கும். 

வைட்டமின் சி உணவு: இரும்புச்சத்து உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது, உடலில் இரும்புச்சத்து உணவை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளான ப்ராக்கோலி, கொத்தமல்லி, வேகவைத்த உருளைக்கிழங்கு, வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும். 

பழங்கள்: கொய்யாப்பழம், ஆப்பிள், வாழைப்பழம், கிவிபழம், அன்னாசி, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சுப்பழம், பாப்பாளி, மாதுளை போன்ற பழங்கள் இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ள இந்த பழங்களில் ஏதாவது ஒன்றையாச்சும் தினமும் எடுத்துக் கொள்ளலாம். இவை உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகை பிரச்சனையிலிருந்தும் விடுதலை அளிக்கிறது. 

பாதாம்: இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் 4 முதல் 5 பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையில் இருந்து விடுபடமுடியும். அதுமட்டுமல்லாமல், பாதாம் பருப்புகள் இருதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்