Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தெரியாம கூட முட்டையுடன் இந்த உணவுகளை சாப்பிட்டுறாதீங்க.. ஆபத்து!! | Foods to Avoid with Eggs

Nandhinipriya Ganeshan Updated:
தெரியாம கூட முட்டையுடன் இந்த உணவுகளை சாப்பிட்டுறாதீங்க.. ஆபத்து!! | Foods to Avoid with EggsRepresentative Image.

அனைவருக்கும் ஃபேவரட் உணவு என்றால் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது முட்டை தான். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகளில் முட்டையும் ஒன்று. இந்த ஒரு பொருளை வைத்து பல ரெசிப்பிகளை குறைந்த நேரத்தில் செய்துவிட முடியும். பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிறைந்த இந்த முட்டையை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் மட்டுமே அதன் சத்துக்கள் உடலுக்கு அப்படியே கிடைக்கும். எல்லா உணவு பொருட்களுக்கும் ஒரு வரைமுறை உண்டு. ஏனெனில், பல சமயங்களில் சில உணவுகளை முட்டையோடு சேர்த்து சாப்பிடுபவர்களின் உடல்நிலை மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. ஒவ்வொருக்கும் ஒருவிதமான டேஸ்ட் இருக்கும். ஆனால், அது எல்லா உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும் விதமாக இருக்காது. அந்தவகையில், முட்டையோடு எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பார்க்கலாம்.

முட்டையோடு சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்:

➥ சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை முட்டையோடு சேர்த்து சாப்பிடக்கூடாது. இதில் இரண்டிலும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், அடிக்கடி சேர்த்து சாப்பிடும்போது இரத்த உறைதலுடன் மாரடைப்புக்கான வாய்ப்புகளையும் அதிகரித்துவிடும்.

➥ பொதுவாக முட்டை உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய ஒரு உணவு. ஆனால், அதை மாட்டிறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்களை விரைவில் சோம்பேறியாக மாற்றிவிடும்.

➥ திராட்சை, தர்பூசணி, ஆப்பிள் போன்ற பழங்களுடன் முட்டையை சாப்பிட கூடாது. ஏனென்றால் பழங்களின் செரிமான வேகமும் முட்டையின் செரிமான வேகமும் மாறுபடுவதால் நம் உடலில் அஜீரண பிரச்சினையை அதிகளவில் ஏற்படுத்தும்.

➥ மீன் மற்றும் முட்டை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் ஒன்றுக்கொன்று சலித்ததில்லை. இருப்பினும், இரண்டு உணவுகளையும் சேர்த்து உட்கொள்வதால் தோலில் வெள்ளை நிற புள்ளிகள் அல்லது பருக்கள் ஏற்படலாம்.

➥ உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து செய்யப்படும் உணவுப் பொருட்களை பலரும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் உருளைக்கிழங்குடன் முட்டையை சாப்பிடுவதால், உருளைக் கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச் சத்தை நம்முடைய உடல் உறிஞ்சுவதை தடுத்துவிடும். அதுமட்டுமல்லாமல், அஜீரண கோளாறையும் ஏற்படுத்தும்.

➥ பெரும்பாலானோர் காலை உணவாக முட்டை மற்றும் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிடுகிறார். ஆனால், வாழைப்பழங்களை முட்டையுடன் சேர்த்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.  

➥ பார்ப்பதற்கு தக்காளியை போன்று தோற்றமளிக்கும் இந்த பெர்சிம்மன் பழத்தில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், இதை முட்டையை சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால், இரைப்பையை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்து, உடலில் நச்சுப் பொருட்கள் சேர்ந்துவிடும். 

➥ டீ அல்லது காபி மற்றும் முட்டையை ஒன்றாக சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வருவந்தால், மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

➥ எலுமிச்சையை முட்டையுடன் சேர்த்து சாப்பிடும் போது அதில் இருக்கும் சிட்ரிக் ஆசிட், மாரடைப்பு அபாயத்தை அதிகரித்துவிடும்.

➥ சோயா மில்க்கில் புரதங்கள், கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்ஸ் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால், பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்