Wed ,Oct 23, 2024

சென்செக்ஸ் 80,081.98
-138.74sensex(-0.17%)
நிஃப்டி24,435.50
-36.60sensex(-0.15%)
USD
81.57
Exclusive

இனிமேல் பார்லர் போக தேவையில்லை!! வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்!!!

Mohanapriya Arumugam December 23, 2021 & 16:35 [IST]
இனிமேல் பார்லர் போக தேவையில்லை!! வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்!!!Representative Image.

பார்லர் போகாமலேயே,  வீட்டிலுள்ள பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்யலாம். இதோ! அதற்கான வழிமுறைகள்:

1. சுத்தப்படுத்துதல் (Cleansing)

பச்சை பால் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலவையில் நனைத்thu உங்கள் முகத்தை சுத்தம் செய்யவும். இது இயற்கையான முறையில் முகத்தில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் கிரீஸ் ஆகியவற்றை நீக்கும் ஒரு இயற்கையான தோல் சுத்தப்படுத்தியாகும்.

2. நீராவிப்பிடித்தல் (Steaming)

இப்போது ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து முகத்தில் 5 நிமிடம் நீராவி படும்படி வைக்கவும். இது ஆழமான சருமத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

3. மசாஜ் அல்லது ஸ்க்ரப்பிங் (Scrubbing)

இப்போது எலுமிச்சை சாறுடன் சிறிது சுத்தமான தேனை தடவவும். 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து முகத்தை கழுவவும். இது சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் ஆக்குகிறது.

4. பேஸ் மாஸ்க் (Face Mask)

புதிய கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெய், தேனுடன் மஞ்சள், எலுமிச்சை சாறுடன் தயிர் இவற்றில் ஏதேனும் ஒரு கலவையை எடுத்து உங்கள் முகத்தில் 15 நிமிடங்கள் தடவவும். இது இயற்கையாகவே தெளிவான மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்