Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

7.3 கிலோ எடையில் பிறந்த குழந்தை.. இதுதான் காரணமாம்! - மருத்துவர்கள் விளக்கம்

Nandhinipriya Ganeshan Updated:
7.3 கிலோ எடையில் பிறந்த குழந்தை.. இதுதான் காரணமாம்! - மருத்துவர்கள் விளக்கம்Representative Image.

பொதுவாக, குழந்தைகள் பிறக்கும்போது 3 கிலோ அல்லது அதற்கு குறைவாக தான் இருக்கும். ஒருசிலருக்கு மட்டுமே 4 கிலோவிற்கு மேல் பிறக்கும், இதுவே அதிக எடையில் இருப்பதாக தான் கூறுவார்கள். இந்த நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த க்ளெடியோன் சாண்டோஸ் என்ற கர்ப்பிணி தாய்க்கு (42 வயது), 7.3 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை மிகவும் எடை அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடந்தது. இது மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தாயும், சேயும் என நலம் என கூறப்படுகிறது. மேலும், இக்குழந்தைக்கு ‘ஆங்கர்சன் சாண்டோஸ்ய என்று பெயரிட்டுள்ளனர். 

இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தையின் தாய், கடுமையான நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அறுவை சிகிச்சை மூலமாக இவருக்குப் பிறந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. மேலும், பிறக்கும் குழந்தை 4 கிலோவுக்கு மேல் எடை இருந்தால், மேக்ரோசோமியாவால் பாதிக்கப்படுவதுண்டு. 

இதற்கு காரணம் தாயின் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகரிப்பால், சிசுவுக்குச் செல்லும் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இதனால் குழந்தை அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் மேக்ரோசோமியாவால் பாதிக்கப்படும். தாயின் நீரிழிவு நோயே குழந்தையின் இப்பிரச்னைக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளனர். இதேப்போல், கடந்த 1955 ஆம் ஆண்டு ஒரு பெண்ணிற்கு 10.2 கிலோ எடையில் குழந்தை பிறந்ததே அதிக எடையாகப் பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்