Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பிணிகள் வேக வைத்த முட்டை சாப்பிடலாமா?

Nandhinipriya Ganeshan August 02, 2022 & 17:30 [IST]
கர்ப்பிணிகள் வேக வைத்த முட்டை சாப்பிடலாமா?Representative Image.

Can Eat Boiled Eggs During Pregnancy: கர்ப்பாக இருக்கும்போது வேக வைத்த முட்டை சாப்பிடலாமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். மருத்துவர்களின் பரிந்துரைப்படி கர்ப்ப காலத்தில் வேக வைத்த முட்டையை தாராளமாக சாப்பிடலாம். இது கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை அளிப்பதோடு, குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பொறுத்து தினமும் 1 – 2 முட்டைகள் வரை சாப்பிடலாம். இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைப்பதோடு, கர்ப்பக்காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். 

குறிப்பாக, முட்டையில் உள்ள கோலின் என்ற ஊட்டச்சத்து கருவின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். கோலின் குறைபாடு பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, பிறப்பு குறைபாடுகளை தவிர்க்க வேண்டும் என்றால், கர்ப்பிணிகள் தினமும் முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும், முட்டையில் உள்ள புரதம் எலும்பு திசுக்கள் மற்றும் தசைகளை உருவாக்கவும் உதவுகிறது. இருப்பினும், கர்ப்பிணிகள் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது.

Tags:

Can eat boiled eggs during pregnancy, Can eat boiled eggs while pregnant, Can I eat egg during pregnancy, Can you eat boiled eggs during pregnancy


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்