Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் மஞ்சள் நாளே ஈரோடு தான்...அதுல அப்படி என்ன ஸ்பெஷல்!

Priyanka Hochumin September 16, 2022 & 18:45 [IST]
தமிழகத்தில் மஞ்சள் நாளே ஈரோடு தான்...அதுல அப்படி என்ன ஸ்பெஷல்!Representative Image.

இன்று ஈரோடு தினம் என்பதால் அங்கு விளைச்சலாகும் அறிய வகை மஞ்சளின் சில சிறப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வோம். தமிழகத்தில் மஞ்சளுக்கென்று பேர் போன ஊர் தான் ஈரோடு. என்ன தான் மற்ற இடங்களில் மஞ்சள் விளைந்தாலும் இதற்கான மருத்துவ குணம், அதனின் மகிமை, நோய் எதிர்ப்பு சக்தி, தரம் போன்றவற்றால் தனித்துவமாக நிற்கிறது. அதற்கான காரணம் மண்ணின் தன்மை மற்றும் நீர் வளம் தான்.

இதுல அப்படி என்ன ஸ்பெஷல்

ஈரோட்டில் விளையும் மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் கிட்டத்தட்ட 90% இருக்கிறது. இது மற்ற இடங்களில் விளையும் மஞ்சளை விட அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. மேலும் இதனின் சுவையையும் யாரும் அடிச்சிக்க முடியாது. இந்த தன்மை உலகில் விளையும் வேற எந்த மஞ்சளுக்கும் கிடையாது என்பதில் நமக்கு ஒரு கர்வம். கூடுதலாக, இது இயற்கை மருத்துவத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

எங்கெங்கே இந்த மஞ்சள் கிடைக்கும்

மஞ்சள் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் ஈரோடு மஞ்சளின் மிகப்பெரிய சந்தையாக திகழ்கிறது ஈரோடு. மேலும் மற்ற இடங்களில் ஈரோடு மஞ்சள் கிடைக்கும் பகுதிகள்,

செம்மாம்பாளையத்தில் நடத்தப்படும் மஞ்சள் சந்தை வளாகம்

பெருந்துறையில் இருக்கும் மஜால் சந்தை வளாகம் 

மஞ்சள் சந்தை வளாகம் கருங்கல்பாளையத்தில்

ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய இடங்களில் கிடைக்கும்.

மஞ்சள் வகைகள்

மஞ்சள் மொத்தம் இரண்டு வகைகளாக கருதப்படுகிறது.

1. சின்ன நாடன் (உள்ளூர் சிறிய ரகம்)

2. பெரும் நாடன் (உள்ளூர் பெரிய ரகம்)

ஈரோட்டில் சின்ன நாடன் அதிகம் விளைகிறது. அது மட்டுமின்றி ஈரோட்டில் விராலி மஞ்சள் (விரல் வகை) மற்றும் கிழங்கு மஞ்சள் (கிழங்கு மஞ்சள்) போன்ற ரகங்களும் உற்பத்தியாகிறது.

இன்றைய விலை நிலவரம் (Sep 16, 2022)

ஈரோடு விராலி வகை மஞ்சள்

ரூ. 7100 – 7300/-

ஈரோடு கிழங்கு வகை மஞ்சள்

ரூ. 6600 – 6800/-

சேலம் விராலி வகை மஞ்சள்

ரூ. 8800 – 9000/-

சிறு சேலம் விராலி வகை மஞ்சள்

ரூ. 7700 – 7900/-

சேலம் கிழங்கு வகை மஞ்சள்

ரூ. 7100 – 7300/-

பழைய விராலி வகை மஞ்சள்

ரூ. 6200 – 6400/-

பழைய கிழங்கு வகை மஞ்சள்

ரூ. 5200 – 5400/-

புவிசார் குறியீடு

ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கள் தமிழக அரசு மூலம் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கொடுக்க விண்ணப்பித்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2019 ஆம் ஆண்டு முதல் ஈரோடு மஞ்சளுக்கு அதிகாரப்பூர்வமாக புவியியல் சார்ந்த குறியீட்டை இந்திய அரசு வழங்கியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்