Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Face Shining Tips in Tamil: பளபளப்பான சருமத்திற்கு சூப்பரான ஜூஸ்… முதல இந்த ஜூஸை குடிங்க..

Nandhinipriya Ganeshan July 30, 2022 & 17:45 [IST]
Face Shining Tips in Tamil: பளபளப்பான சருமத்திற்கு சூப்பரான ஜூஸ்… முதல இந்த ஜூஸை குடிங்க..Representative Image.

Face Shining Tips in Tamil: கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்டஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் இயக்கத்தைத் தடுக்க உதவுகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்து வயதான தோற்றை ஏற்படுத்துகிறது. ஆனால், கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு இரண்டிலும் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது தோல் சேதம் மற்றும் முன்கூட்டியே வயதான பிரச்சனையை குறைக்க உதவும். 

இந்த ஜூஸ் உங்களுடைய உடலையும், சருமத்தையும் சுத்தம் செய்து, தெளிவான மற்றும் பிரச்சனையற்ற சருமத்தை தருகிறது. கொத்தமல்லி, எலுமிச்சை ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், பளபளப்பான சருமம் கிடைக்கும், அதுமட்டுமல்லாமல் முகப்பரு பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம். வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இது ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது சருமத்தை நீரேற்றமாகவும், சருமத்தின் பிரகாசத்தையும் இயற்கையாகவே (glowing skin tips in tamil) அதிகரிக்கிறது. அதுமட்டுமன்றி, பருக்களை தடுக்க இந்த சாறை வெளிப்புறமாக உங்கள் முகத்திலும் தடவலாம். நல்ல பலன் கிடைக்கும்.

கொத்தமல்லி மற்றும் எலுமிச்சையின் நன்மைகள்:

கொத்தமல்லி இலைகளில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும், எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலத்தின் செழுமை, சரும எண்ணெய் சுரப்பதைக் குறைக்கிறது; இதேபோல், எலுமிச்சையின் ஆண்டிசெப்டிக் பண்புகள் பருக்கள் அல்லது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது. நீங்கள் அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற (skin beauty tips in tamil)  விரும்பினால், இந்த சாற்றை தினமும் குடிங்க....

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி இலை - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

தண்ணீர் தேவைக்கேற்ப

முறை:

நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர், ரொம்ப கட்டியாக இருந்தால், மீண்டும் தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள்.

சுவைக்காக வேண்டுமென்றால் ஒரு சிட்டிகை சாட் மசாலாவையும் சேர்த்துக் கொள்ளலாம். 

இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வர, உங்களுடைய சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே (natural beauty tips for face in tamil) உணரலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்