Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Keep Feet Beautiful: அழகான மென்மையான கால்களை பெற இத மட்டும் பண்ணுங்க.. 

Nandhinipriya Ganeshan July 30, 2022 & 09:50 [IST]
How to Keep Feet Beautiful: அழகான மென்மையான கால்களை பெற இத மட்டும் பண்ணுங்க.. Representative Image.

How to Keep Feet Beautiful: நம் உடலில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக தான் நம் கால்களை நினைக்கிறோம். அந்த வகையில் நம்மில் பெரும்பாலானோர் கால்களைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது. ஆனால், கால்களை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், ஒருபக்கம் நாள் முழுவதும் ஸூவ் கொண்டு மூடப்பட்டிருக்கும் மறுபக்கம் தூசிகளால் அசுத்தமடைந்திருக்கும். மற்ற உடல் பாகங்களுடன் ஒப்பிடும் போது பாதங்களில் உள்ள தோல் தடிமனாக இருக்கும், கவனிப்பு இல்லாமல் அழுக்காக இருக்கும். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கலாம். இதெல்லாம் சரியான கவனிப்பு இல்லாமல் இருப்பதால் தான் நிகழ்கிறது. ஆனால், அந்த வெடிப்புகளை ஸூவ் கொண்டு மறைக்கிறோம். அது உராய்வின் காரணமாக வலிக்கு வழிவகுக்கிறது மற்றும் காற்று சுழற்சியை நிறுத்துகிறது. 

வறச்சி, வெடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க, கால்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதும், இறந்த செல்களை தவறாமல் வெளியேற்றுவதும் (feet whitening pedicure at home in tamil) அவசியம். பொதுவாக, ஒரு சிலர் அதிகமாக நடப்பதாலும், அதிக நேரம் நிற்பதாலும் குதிகாலில் வெடிப்புகள் ஏற்படுகிறது. மேலும், குதிகால் விரிசல்  நீரிழப்பு, ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் மற்றும் தவறான காலணிகளை அணிவதாலும் கூட ஏற்படுகிறது. வீட்டிலேயே உங்க கால்களை பராமரிக்க சில குறிப்புகள்... இத ட்ரை பண்ணிப் பாருங்க..

கால்களை ஈரப்பதமாக வைத்திருங்கள்

தினமும் இரண்டு முறையாவது சோப்பை பயன்படுத்தி நன்றாக கால்களை (How to predicure feet at home) கழுவிவுங்கள். அடுத்து ஒரு துண்டு கொண்டு நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். கால் தோலில் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது. எனவே, மென்மையை பராமரிக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஏதேனும் கிரீமை பூசிக்கொள்ளுங்கள். இது உங்கள் பாதங்களை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவும். இதனால் வெடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

நெயில் பாலிஷை அகற்றுங்கள்

பொதுவாக, நம்மில் பலர் விரிசல், நிறமாற்றம், அல்லது சிதைவுற்ற நகங்களை மறைக்க நெயில் பாலிஷை பயன்படுத்துவது உண்டு. ஆனால், இவ்வாறு செய்வதால் அதன் பாதிப்பை மோசமாக்கும். அடிக்கடி நகங்களில் நெயில் பாலிஷ் போடாமால், வெளியில் செல்லும்போதும் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி வைத்த நெயில் பாலிஷை குறைந்தது இரண்டு நாட்களில் அகற்றப்பாருங்கள். ஏனெனில், இது நகத்தில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என பரிசோதிக்க உதவும்.

நகங்களை வெட்டுங்கள்

கால் நகங்களை வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்வது (How to predicure feet at home) அவசியம். அதில் ஒன்று நகங்களை வெட்டுவது. அப்படி வெட்டாமல் வளர்ப்பதன் மூலம் பாக்டீரியாக்கள் நகத்தின் உள்ளே சென்று வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அப்படி நகங்களை வெட்டும்போது பார்த்து நிதானமாக வெட்ட வேண்டும். தோலுக்கு பக்கத்தில் இருக்கும் நகங்களை வெட்டுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வெட்டுவதற்கு எப்போதும் நெயில் கட்டர்களைப் பயன்படுத்துங்கள். அதை தவிர்த்து பிளேடு, கத்தரிக்கோல் என அனைத்தையும் பயன்படுத்த கூடாது. எப்போது குளித்த பிறகு நகங்களை வெட்டுங்கள்.

பாதத்தை மென்மையாக்குங்கள்

குளிக்கும் போது ஈரமான குதிகால் மீது பியூமிஸ் ஸ்டோன் அல்லது ஃபுட் ஸ்க்ரப் கொண்டு தேய்ப்பதால், இறந்த செல்களை மிக எளிதாக வெளியேற்ற உதவும். இல்லையெனில், வாரத்திற்கு இருமுறை கால்களை பெடிக்யூர் செய்யுங்கள். வெதுவெதுப்பான நீரில் உங்கள் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து, பியூமிஸ் ஸ்டோன் கொண்டு மெதுவாக தேய்க்கவும். இதன் மூலம் இறந்த செல்கள் வெளியேறி விடும். பின்னர், உங்கள் கால்களை கழுவி ஒரு துண்டில் நன்றாக துடைத்து, ஷியா வெண்ணெய் அல்லது கொக்கோ வெண்ணெய் பயன்படுத்தப்பட்ட கால் கிரீம் அல்லது மாய்ஸ்சரைசரை தடவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் இறந்த செல்கள் வெளியேறி கால் எந்த வெடிப்பு இல்லாமல் மென்மையாக (pedicure at home with home ingredients) இருக்கும்.

பொருத்தமான காலணிகளை அணியுங்கள்

நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் அல்லது நின்று கொண்டிருந்தாலும், இறுக்கமான காலணிகள் நீண்ட கால கால் பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். இறுக்கமான காலணிகள் சிறியதாக இருக்கும், மேலும் அது நடக்கும்போது உங்கள் கால்களில் வலியை ஏற்படுத்துகிறது. அதேபோல் தளர்வான காலணிகள் மிகவும் பெரியதாக இருக்கும், நடக்கும்போது நீங்கள் தடுமாறலாம், இது கீழே விழும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. 

எனவே, காலுக்கு சரியாக பொருத்தமான அளவு கொண்ட காலணிகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள். மேலும், மற்றவர்களுடைய காலணிகள் அல்லது காலுறைகளை அணிவதை தவிர்க்கவும். ஏனெனில், பாக்டீரியா எளிதில் பரவக்கூடும். ஹை ஹீல்ஸ் அல்லது பாயிண்ட் ஷூக்களை நீண்ட நேரம் அணிவதைத் தவிர்க்கவும்.

ஆரோக்கியமான பாதங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்

உங்கள் பாதங்களை ஆரோக்கியமாகவும், பல்வேறு கால் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் தவறாமல் மசாஜ் செய்யயுங்கள். தினமும், சூடான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் உங்கள் கால்களைப் மசாஜ் செய்தால் பல நன்மைகளை வழங்குகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், 

  • நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
  • பாதங்களில் உள்ள அசௌகரியத்தை குறைத்து வலியை நீக்குகிறது.
  • கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 
  • ஓய்வெடுக்க உங்களுக்கு உதவுகிறது.
  • மனஅழுத்தத்தை போக்குகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் நமது பாதங்களில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல், பாதங்கள் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதற்காக அடிக்கடி பார்லர் சென்று அதிக பணத்தை செலவிட தேவையில்லை. நமது உடலில் இதுவும் ஒரு பகுதி தான், எனவே தூய்மையாக வைத்துக்கொள்வது நம்முடைய கடமையாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்