Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பம் மாதம் 1: கர்ப்பத்தின் முதல் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. | Foods to Avoid in First Month of Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கர்ப்பம் மாதம் 1: கர்ப்பத்தின் முதல் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. | Foods to Avoid in First Month of Pregnancy in TamilRepresentative Image.

கருவுற்ற முதல் இரண்டு மாதங்கள் வரை உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று. காரணம் மூன்று மாதம் வரையிலும் கரு பலவீனமானதாக தான் இருக்கும். அப்போது சில உணவுகளை அந்த பெண் எடுத்துக்கொள்ளும் அது கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம். அந்தவகையில், முதல் மாதத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பது பற்றி இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை முறையாக ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் கடைபிடிக்க வேண்டும்.

கர்ப்பத்தின் முதல் மாதத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்:

கர்ப்பத்தின் முதல் மாதத்தில் சீஸ் உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரணம், இந்த சீஸ் பதப்படுத்தப்படாத பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால், ஃபுட் பாய்ஷன் ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கும். அதை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, ஆரம்பகால கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பது நல்லது.

மைக்ரோவேவ்-ரெடி உணவுகள், கேக்குகள், பிஸ்கட்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ்கள் போன்ற ஜீரோ கலோரி உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். மேலும், சில பதப்படுத்தப்பட்ட உணவுகளில் தீங்கு விளைக்கக்கூடிய பாக்டீரியாக்களும் இருக்கலாம்.

கடல் உணவுகளில் அதிகளவு பாதரசம் இருக்கும். இது கருவின் மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடும். எனவே, வால்மீன், டுனா ஆகியவற்றை ஆரம்ப காலத்தில் மட்டுமல்லாமல், கர்ப்ப காலம் முழுவதுமே தவிர்ப்பது நல்லது.

பொதுவாக, பழங்கள் ஆரோக்கியமானது தான். இருப்பினும், சில பழங்களை கர்ப்பத்தின் முதல் மாதத்தில் சாப்பிடக்கூடாது. அவற்றில் ஒன்று தான் பப்பாளி. பழுக்காத மற்றும் அரை பழுத்த பப்பாளி பழங்களில் லேடெக்ஸ் இருக்கிறது. இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால், குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். எனவே கர்ப்ப காலத்தில் இவற்றை தவிர்க்கவும். இருப்பினும், பழுத்த பப்பாளியில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

அதேபோல், அன்னாசிப்பழத்தையும் இந்த மாதிரியான நேரத்தில் சாப்பிடக்கூடாது. காரணம் அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் உள்ளது, இது கருப்பை வாயை மென்மையாக்கி, கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கலாம். எனவே, கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது .

சில பெண்களுக்கு ஆஃப் பாயில் சாப்பிடுவது, பச்சை முட்டையை குடிப்பது மிகவும் பிடிக்கும். இருப்பினும், கர்ப்பக் காலத்தில் அப்படி உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பச்சை முட்டையில் இருக்கும் ஒருவிதமான நுண்ணுயிரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் தீங்கு விளைவிக்கக்கூடியது.

அதிகளவு காஃபின் உட்கொள்வதையும், ஆல்கஹால் எடுத்துக் கொள்வதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். அதேபோல், அதிகப்படியான இனிப்புகள் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இது எடை அதிகரிப்பு மற்றும் கர்ப்பக்கால நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம்.

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்