Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பம் மாதம் 1: கர்ப்பத்தின் முதல் மாதத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள்.. | Body Changes in 1st Month of Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கர்ப்பம் மாதம் 1: கர்ப்பத்தின் முதல் மாதத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள்.. | Body Changes in 1st Month of Pregnancy in TamilRepresentative Image.

ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் தாய்மை உணரும் தருணங்களெல்லாம் வசந்தகாலம் தான். அப்படிப்பட்ட உணர்வினை கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்தே அறிந்துக் கொள்ள முடியும். அதாவது, மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் என்பது நிகழ்கிறது. இதனால் கருவுற்ற முதல் வாரத்திலேயே அறிகுறிகள் தென்படும். அந்தவகையில், கர்ப்பத்தின் முதல் மாதத்தில் ஏற்படும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பார்க்கலாம். முதல் மாதம் என்பது உங்களுடைய கடைசி மாதவிடாய் தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, இந்த அறிகுறிகளும் மாற்றங்களும் தான் நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.

கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

➥ கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உங்கள் உடலின் அளவு மற்றும் வடிவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் கவனிக்கலாம். 

➥ எப்போதும் இல்லாமல் திடீரென கை மற்றும் கால்கள் வீங்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதேபோல், இடுப்புப் பட்டை இறுக்கமாக இருக்கும்.

➥ மார்பகங்களில் அளவுகள் அதிகரித்து காணப்படும். மேலும், முலைக்காம்பைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரியதாகவும் கருமையாகவும் மாறும்.

➥ அண்டவிடுப்பிற்கு (அதாவது கருப்பையில் கரு பொருத்தப்படும் போது) பின்பு ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை; உங்கள் பிறப்புறுப்பில் 2 அல்லது 3 சொட்டு இரத்தப்போக்கு (spotting) ஏற்படும். இது கர்ப்பக்காலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் பொதுவான ஒன்று தான்.

➥ யோனி சுரப்பு எப்போதும் இல்லாமல், இந்த மாதிரியான தருணத்தில் அதிகரித்து காணப்படும். சிலருக்கு அவற்றின் நிறம் மற்றும் தன்மையில் மாற்றம் இருக்கும்.

➥ கருப்பையில் கரு உள்வைப்பு நடைபெறுவதால், அதீத சோர்வாக உணர்வீர்கள். அடிக்கடி தலைச்சுற்றுவது போன்று உணர்வு ஏற்படும்.

➥ ஹார்மோன் மாற்றங்களால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படும். இதனால், சில சமயங்களில் ஈறுகளில் இரத்த கசிவும் ஏற்படும். 

மேலே குறிப்பிட்ட சில அறிகுறிகள் மற்றும் உடல் மாற்றங்களை நீங்கள் அனுபவித்தீர்கள் என்றால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்