Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குறை பிரசவம் ஏற்பட இது தான் காரணம்..! கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.! | Premature Baby Reasons In Tamil

Gowthami Subramani Updated:
குறை பிரசவம் ஏற்பட இது தான் காரணம்..! கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.! | Premature Baby Reasons In TamilRepresentative Image.

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன. இது குழந்தைகள் இறப்பதற்குக் காரணமாகவும் அமையும். குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குழந்தை எடை குறைவாகப் பிறக்கும். இந்த குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்று கூறுவர். இதனை ஆங்கிலத்தில் பிரிமெச்சூர் என்று கூறுவர்.

குறைப் பிரசவம்

கருப்பை திசுச்சுரண்டல் எனப்படக்கூடிய டி அன்ட் சி செய்வதன் காரணமாக, கருப்பையின் கழுத்துப் பகுதி வலுவிலந்து விடலாம். இதன் காரணமாக, கருப்பைத் திசு தளர்வதுடன் அதில் குழந்தை வளரும் போது குழந்தையைத் தங்க வைக்க முடியாமல், கருப்பை வாய் திறக்க ஆரம்பித்து விடும். இந்த நிலையில் கரு சிதைந்து விட வாய்ப்புள்ளது. இவ்வாறு நிகழாத சமயத்தில் குறை பிரசவம் உண்டாவது உறுதியாகும்.

குறைபிரசவ மற்றும் முதிராத குழந்தை

கர்ப்பம் தரித்ததில் இருந்து 37-ஆவது வாரத்திற்கு முன்பு பிறக்கும் குழந்தை குறை பிரசவக் குழந்தை எனக் கூறப்படுகிறது. அதே போல, 37 ஆவது வாரத்திற்குப் பிறகு பிறந்தாலும், குழந்தையின் எடை மிகக் குறைவாக இருப்பதை முதிராத குழந்தை எனக் கூறுவர்.

குறைபிரசவத்திற்கான காரணம்

பெண்கள் சாதாரண நிலையில் இருப்பதை விட கர்ப்ப காலத்தில் இருக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் போதுமான அளவு ஊட்டசத்து சாப்பிடாமல், கர்ப்பகாலத்தில் தேவையான பராமரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும், இரத்த சோகை ஏற்படுவதால் உண்டாகும் அசதியினால் பாதிக்கப்பட்டவர்களும், பால்வினை நோய்களால் தாக்கப்பட்ட சமயத்திலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும், கர்ப்பிணி பெண்கள் கடுமையான காய்ச்சல், சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பினும் குறைபிரசவம் நிகழ வாய்ப்புண்டு.

முக்கியமாக, கர்ப்பம் தரித்த பெண்களின் வயதைப் பொறுத்தும் ஏற்படலாம். அதாவது, கர்ப்பிணி பெண்கள் 16 வயதுக்கு உட்பட்டட்டவராகவோ 35 வயதுக்கு மேற்பட்டவராகவோ உள்ள இருந்தால் அவர்களுக்கு குறை பிரசவம் நிகழ அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும், குறைப்பிரசவம் சில இயற்கையாகக் காரணங்களினால் நிகழ்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண்கள் இந்த காலகட்டங்களில் மிகுந்த பாதுகாப்புடனும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது சிறப்பு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்