Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கருச்சிதைவுக்கு பிறகு எப்போது தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்..? | Sex After Miscarriage

Nandhinipriya Ganeshan Updated:
கருச்சிதைவுக்கு பிறகு எப்போது தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்..? | Sex After MiscarriageRepresentative Image.

கருச்சிதைவு என்பது ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு. நானும் தாயாகப் போகிறேன் என்று பல கனவுகளுடன் புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, எதிர்பாராத விதமாக அது நடக்காமல் போனால் அந்த பெண்ணிற்கு மனதில் ஏற்படும் வலிகளுக்கு அளவே இருக்காது. இதனால், கருச்சிதைவுக்கு பிறகு அவர்கள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் முழுமையாக குணமடைய சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். 

வழக்கமான வாழ்க்கைக்கு திரும்புவது சற்று சவாலான காரியமாக இருக்கும். மேலும், இந்த மாதிரியான சமயத்தில் அனைத்து தம்பதிகளுக்கும் மனதில் வரும் சந்தேகம், கருச்சிதைவுக்கு பிறகு தாம்பத்திய உறவு எப்போது வைத்துக் கொள்ளலாம்? அப்படியே வைத்துக்கொண்டாலும் அது பாதுகாப்பானதாக இருக்குமா? என்பதாக தான் இருக்கும்.

கருச்சிதைவுக்கு பிறகு தாம்பத்திய உறவு:

கருச்சிதைவுக்கு பிறகு தாம்பத்திய உறவை மீண்டும் தொடங்குவதற்கான காத்திருப்பு காலம் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான சிகிச்சைகளுக்கு தேவைப்படும் நேரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு தம்பதிக்கும் மாறுபடும். அதன்படி, தம்பதி உணர்ச்சிப்பூர்வமாக தயாரானதும், பெண்ணின் உடல் முழுமையாகக் குணமடைந்த பிறகும் உறவை தொடரலாம். 

பொதுவாக, முதல் மூன்று மாதங்களில் (First Trimester) கருச்சிதைவு ஏற்பட்டால், பெண்ணின் பிறப்புறப்பில் வலி, இரத்தப்போக்கு இருக்கும். ஒருவேளை வலி, இரத்தப்போக்கு எதுவும் இல்லை என்றால், இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகு உறவில் ஈடுபடலாம். இருப்பினும், இரண்டாவது (Second Trimester) அல்லது மூன்றாவது மூன்று மாதங்களில் (Third Trimester) கருச்சிதை ஏற்பட்டால், பாலியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க குறைந்தது ஆறு வாரங்கள் காத்திருப்பது நல்லது. 

கருச்சிதைவுக்கு பிறகு எப்போது தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்..? | Sex After MiscarriageRepresentative Image

அடுத்த குழந்தைக்கு எப்போது முயற்சி செய்யலாம்?

பெரும்பாலான மருத்துவர்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு மீண்டும் அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்யும்போது முதல் மாதவிடாய் வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். முதல் மாதவிடாய் என்பது கருச்சிதைவுக்கு நான்கிலிருந்து ஐந்து வாரங்கள் வரை ஆகும். ஏனென்றால், கருக்கலைந்த பிறகு ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன் அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இந்த கால அவகாசம் தேவைப்படுகிறது. 

கருச்சிதைவுக்குப் பிறகு மீண்டும் கருத்தரிக்க முயற்சி செய்ய நீங்கள் குறைந்தது ஒரு மாதமாவது காத்திருக்க வேண்டும். இருப்பினும், சில பெண்களுக்கு கருச்சிதைவுக்கு பிறகு சில வாரங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படலாம். வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், இரத்தப்போக்கு முற்றிலும் நிற்கும் வரை உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. இதனால், பாலியல் தொடர்பான தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும், சில பெண்களுக்கு கர்ப்பையில் உள்ள எஞ்சிய திசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை வரலாம். இந்த செயல்முறையில் உடல் முழுவதுமாக குணமடைய குறைந்தது மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் எடுத்துக்கொள்ளும். இது அவர்களின் உடலை பொருத்தது. 

மேலும், கருச்சிதைவுக்குப் பிறகு கருப்பை வாய் மற்றும் கருப்பை ஓரளவு விரிவடைந்து காணப்படும். இதனால், கருப்பையில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவற்றை தவிர்க்கவும், பிறப்புறுப்பு முழுமையாக குணமடையும் வரையிலும் டம்போன்களைப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்