Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னது பச்சையான உணவுகளை சாப்பிட்டும் எடையை குறைக்கலாமா..! | Healthy Raw Food Diet in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
என்னது பச்சையான உணவுகளை சாப்பிட்டும் எடையை குறைக்கலாமா..! | Healthy Raw Food Diet in TamilRepresentative Image.

ராவ் ஃபுட் டயட் என்பது சமைக்கப்படாத உணவை மட்டுமே உண்ணும் ஒரு வித டயட் முறையாகும். வெஜ் பிரியர்களுக்கு சிறந்த டயட் வகையும் கூட. இப்படி சாப்பிடாலும் எடையை குறைக்கலாம். சில நேரங்களில் இதில் மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளும் பச்சையாக சாப்பிட வேண்டிருக்கும். ஆனால், இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் மூல உணவுகளை அதாவது சமைக்கப்படாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்.

என்ன சாப்பிடலாம்?

  • பச்சை கொட்டைகள் மற்றும் விதைகள்
  • அனைத்து விதமான பழங்கள் மற்றும் காய்கறிகள்
  • உலர்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்
  • பாதாம் பட்டர் மற்றும் பீநட் பட்டர்
  • முளைத்த, பச்சையாகவோ அல்லது ஊறவைத்த தானியங்கள், பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள்
  • தேங்காய்ப்பால்
  • பாதாம் பால்
  • கடற்பாசிகள்
  • பச்சை பால் மற்றும் முட்டை (விரும்பினால்)
  • இறைச்சி மற்றும் மீன் (விரும்பினால்)
  • மற்ற இயற்கை மற்றும் ஆர்கானிக் உணவுகள்

எதை தவிர்க்க வேண்டும்?

  • உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வது
  • சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சர்க்கரை மற்றும் மாவு
  • சமைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் இறைச்சிகள்
  • டீ மற்றும் காபி
  • ஆல்கஹால்
  • பாஸ்தா
  • சுடப்பட்ட உணவுப் பொருட்கள்
  • வறுத்த கொட்டைகள் மற்றும் விதைகள், அவற்றின் வெண்ணெய் உட்பட
  • டப்பாவில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் பால் பொருட்கள்
  • மற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தின்பண்டங்கள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கிறது

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பொதுவாக சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், இரத்த நாளங்களில் வீக்கம் மற்றும் இருதய நோய்களைத் தூண்டுகிறது. எனவே, இந்த உணவுகளை அகற்றுவது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

எடையை குறைக்க உதவுகிறது

சமைக்காத உணவுகளை உண்பதால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். பொதுவாக இந்த உணவுகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால், தாவர அடிப்படையிலான உணவுகள் நார்ச்சத்து நிறைந்தவை, அத்துடன் உப்பு, சமையல் எண்ணெய்கள் அல்லது சர்க்கரை இல்லாதது. இதனால், எளிதில் உடல் எடையை குறைத்துவிட முடியும்.

ஊட்டச்சத்து நிறைந்தது

ஒரு பொருளை சமைப்பதன் மூலம் நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஸ் மற்றும் வைட்டமின் பி போன்ற சில ஊட்டச்சத்துகள் நீக்கப்படுகின்றன. ஆனால், ராவ் ஃபுட் டயட் என்பது முழுக்க முழுக்க சமைக்கப்படாத காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், பருப்பு வகைகள் நிறைந்தது. இதனால், அவற்றில் இருந்து கிடைக்கும் அனைத்து சத்துக்களும் உடலுக்கு அப்படியே கொடுக்கப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த டயட் என்றால் ராவ் ஃபுட் டயட் தான். மேலும், பச்சையாக உணவுகளை உண்பது உங்கள் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

மூல (சமைக்கப்படாத உணவு) உணவில் உள்ள ஆபத்துகள்:

என்னதான் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பச்சையாக சாப்பிட்டாலும், அவற்றில் சில மூல உணவுகளை உண்பது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில், அந்த உணவுகளில் ஈ.கோலி போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. சமைப்பதால் உணவுகளில் உள்ள பாக்டீரியாக்கள், நச்சுகள் மற்றும் பிற கிருமிகள் அழிக்கப்பட்டு, உணவு விஷம் ஏற்படுவதைத் தடுக்கிறது. எப்பொழுதும் தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களை உண்ணும் முன் நன்றாகக் கழுவ வேண்டும். அப்படி நீங்க எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டிய சில உணவுகள் என்னென்னவென்று தெரிந்துக் கொள்வது அவசியம்.

  • கிட்னி பீன்ஸ்
  • பருப்பு
  • அவரை  
  • முளை விதைகள்
  • முட்டை
  • கடல் உணவுகள்
  • ஜெல்லி மீன்
  • பால் பொருட்கள்

குறிப்பு: கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த டயட்டை பின்பற்ற வேண்டாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்