Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Homemade Feminine Wash: பிறப்புறுப்பை சுத்தமா வெச்சிக்க ஹோம் மேட் வெஜினல் வாஷ்...!!

Nandhinipriya Ganeshan June 25, 2022 & 19:30 [IST]
Homemade Feminine Wash: பிறப்புறுப்பை சுத்தமா வெச்சிக்க ஹோம் மேட் வெஜினல் வாஷ்...!!Representative Image.

Homemade Feminine Wash: பெண்களின் உடலில் மிகவும் மென்மையான பகுதி பிறப்புறுப்பு. இதை எப்போதும் சுத்தமாகவும், ஈரப்பதனுடம் வைத்துக் கொள்வது மிக அவசியமான ஒன்று. அதற்காக பெண்கள் கண்ட கண்ட சோப், கெமிக்கல் கலந்த வெஜினல் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்தி சுத்தம் செய்வார்கள். ஒரு சில பெண்களுக்கு அந்த இடத்தில் துர்நாற்றம் வீசும், இதற்காக அவர்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதுண்டு. இதனால், பிறப்புறுப்பில் இருக்க வேண்டிய நல்ல பாக்டீரியாக்கள் எல்லாம் அழிந்து எரிச்சல், சிவந்த தோல், அரிப்பு, வறட்சி, வெள்ளைப்படுதல் என பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிடும். 

அதுமட்டுமல்லாமல், pH அளவு மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் இல்லாதால் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. இதை எல்லாவற்றையும் தவிர்க்க நீங்க வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு உங்களுடைய பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம். இதனால் பிறப்புறுப்பில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரித்து நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

ஹோம் மேட் வெஜினல் (natural feminine wash) வாஷ்:

1. 7-8 டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு இளஞ்சூடாக்கி, அந்த இடங்களில் கழுவ வேண்டும். பின்பு சாதாரண தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். இதனால் கெட்ட பாக்டீரியாக்கள் நீங்கி துர்நாற்றம் வீசாமல் பார்த்துக் கொள்ளும். 

2. தயிரை பிறப்புறுப்பில் தடவிக் கொள்ளுங்கள். அதை அரை மணி நேரம் அப்படியே வைத்து பிறகு சாதாரண தண்ணீரில் கழுவிட வேண்டும். இதில் சிறிதளவு மஞ்சள் வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

3. குளித்த முடித்த பிறகு 1/4 பக்கெட் தண்ணீரில் 6-8 துளிகள் டீ ட்ரீ ஆயிலை ஊற்றி, பிறப்பை கழுவினால் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். இதை இரண்டு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் துர்நாற்றம் நீங்கும். 

4. ஒரு கப் தண்ணீரில் கற்றாழை ஜெல்லை போட்டு கலக்கி, அதை கொண்டு பிறப்புறப்பை சுத்தம் செய்தால் வெள்ளைப்படுவதால் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்