Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீரிழிவு நோய் உள்ளவங்க சர்க்கரை அளவு ஏறாம உருளைக்கிழங்க எப்படி சாப்பிடலாம்?

Editorial Desk Updated:
நீரிழிவு நோய் உள்ளவங்க சர்க்கரை அளவு ஏறாம உருளைக்கிழங்க எப்படி சாப்பிடலாம்?Representative Image.

நீரிழிவு நோயாளிகளுக்கு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கார்போஹைட்ரேட் உட்கொள்வதை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமானது. காய்கறிகளில் கார்போஹைட்ரேட் உருளைக்கிழங்கில் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக வாய்ப்புள்ளது. ஆகையால் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை எப்படி சாப்பிடலாம் என்று பாப்போம்.

கிளைசெமிக் இண்டெக்ஸ்

உருளைக்கிழங்கில் நிறைய வகைகள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மாரியான தாக்கத்தை நமக்கு ஏற்படுத்தும். எனவே, கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) என்னும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு உணவு எவ்வளவு விரைவாக இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆகையால், குறைந்த ஜிஐ உருளைக்கிழங்கைத் தேர்ந்தெடுத்து இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அல்லது நிலையாக அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

எப்படி உருளைக்கிழங்கை சாப்பிடலாம்

முதலில் உருளைக்கிழங்கு எடுத்துக்கொள்ளும் அளவில் கவனம் செலுத்த வேண்டும். பாதி அல்லது சிறிதளவு உருளைக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.

மேலும் உருளைக்கிழங்கை பேக் செய்து சாப்பிடலாம்.

அடுத்து உருளைக்கிழங்கை எண்ணெய் அல்லது வெண்ணையில் வறுத்து சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் அது உடலில் கலோரி மற்றும் கொழுப்பை அதிகரிக்கும்.

கிரேக்க தயிர், மூலிகைகள், மசாலாப் பொருட்கள் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவையுடன் உருளைக்கிழங்கை சேர்த்துக்கொள்ளலாம்.

எப்படி சாப்பிட கூடாது?

புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளுடன் உருளைக்கிழங்கை சேர்த்து சாப்பிட கூடாது.

கிரீமி சாஸ்கள் அல்லது சீஸ்-களுடன் சேர்த்து உருளைக்கிழங்கை சாப்பிடுவதை தவிர்க்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்