Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பாலை சேமிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி

Vaishnavi Subramani Updated:
குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பாலை சேமிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி Representative Image.

இந்த காலகட்டத்தில் பல தாய்மார்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள் ஆனாலும் அவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி நினைத்துக் கவலைப்படுவார்கள் அதற்கு இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். இந்த தாய்ப்பாலைச் சேகரிக்கும் முறையில் எவ்வளவு நாட்கள் வைத்துப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொள்வது அவசியம்.

இந்த முறை மூலம் வீட்டில் நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் குழந்தை உங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியும். இந்த முறையில் நீங்கள் கொடுக்கும் தாய்ப்பால் சத்து மாறாமல் குழந்தை முழுவதுமாக சத்து சேரும் எந்த பிரச்சனைகளும் வராது. சரிவாங்க இந்த பதிவில் குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது எப்படி எனப் பார்க்கலாம்.

குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பாலை சேமிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி Representative Image

தாய்ப்பாலைச் சேமிப்பது மற்றும் குழந்தைகளுக்குக் கொடுப்பது எப்படி

✤ இந்த பதிவில் இரண்டு முறை மூலம் தாய்ப்பால் சேமிப்பதைப் பற்றிப் பார்க்கலாம். இந்த முறைக்குக் குளிர்சாதனப் பெட்டி மிகவும் அவசியம். அது இல்லாமல் இந்த முறை பயன்படுத்த முடியாது.

✤ முதல் முறை குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துவது. இரண்டாம் முறை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப் பயன்படுத்துவது என இரண்டு முறை மூலம் சேகரிக்கலாம். இதன் மூலம் பால் ஊட்டச்சத்து எந்த வகையிலும் குறையாது.

குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பாலை சேமிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி Representative Image

ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துவது எப்படி

✤ முதலில் தாய்ப்பால் பம்ப் செய்யும் மெஷின் மற்றும் மார்பகங்கள் நன்றாகச் சுத்தம் செய்வது அவசியம். இல்லை என்றால் அழுக்குகள் அல்லது கிருமிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

✤ இந்த முறை மூலம் மூன்று மாதங்கள் வரை தாய்ப்பாலைச் சேகரித்து வைத்துப் பயன்படுத்தலாம்.

✤ பாலை சேகரிப்பதற்கு, 60 மிலி சிறிய அளவில் ஆனா பாத்திரத்தில் மூடியுடன் கூடிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

✤ பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்தினால் ஒருமுறை எடுத்துப் பயன்படுத்திய பிறகு,மீண்டும் அதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. குழந்தை குடித்தது போக மீதம் இருந்தால் அதை அகற்ற வேண்டும்.

✤ அந்த சிறிய பாத்திரத்தில் பம்ப் மூலம் பால் முழுவதுமாக நிறப்பாமல் பாத்திரத்தில் முக்கால் பாகம் அளவிற்கு நிறப்ப வேண்டும்.

குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பாலை சேமிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி Representative Image

✤ பால் நிறப்பிய பாத்திரத்தை ஃப்ரீஸரில் வைத்து -18 டிகிரி செல்சியாஸ் அளவு மற்றும் 0 ஃபாரஹீட்  வெப்பநிலையில் வைப்பது நல்லது.

✤ ஃப்ரீஸரில் இருந்து எடுக்கும் பாத்திரத்தை முதலில் ஒரு குலுக்கு குலுக்கிய, பின் பயன்படுத்த வேண்டும். குளிர்த்த பாலை அப்படியே பயன்படுத்தக் கூடாது.

✤ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதை நன்றாகச் சூடுபடுத்தி அதிகபட்சம் 37 டிகிரி செல்சியாஸ் அல்லது 99 ஃபாரஹீட் ஆக வரும் வரை சூடுபடுத்த வேண்டும்.

✤ இந்த தண்ணீரில் பால் பாத்திரத்தை வைத்தால் அதில் உள்ள குளிர்ச்சியான தன்மை நீங்கி அறைவெப்பநிலைக்கு வரும் இந்த பாலை குழந்தைக்குக் கொடுக்கலாம்.

✤ இந்த முறையில் குழந்தைகளுக்குக் கொடுத்தது போக மீதம் உள்ள பாலை எடுத்து ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது.மீதம் பால் இருந்தால் அதை அகற்ற வேண்டும். இதற்கு முதலில் பால் சேகரிக்கும் போது குழந்தை எந்த அளவிற்குப் பால் குடிக்கும்  என அந்த அளவை பொறுத்துச் சேமிக்க வேண்டும்.

குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பாலை சேமிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி Representative Image

குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்துவது எப்படி

✤ தாய்ப்பாலைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் இந்த முறையில் முதலில் தாய்ப்பால் பம்ப் மற்றும் மார்பகங்களை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறையில் தாய்ப்பாலை மூன்று நாட்கள் மட்டும் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

✤ அதன் பின், பாலை  ஸ்டெயின்லெஸ் ஸ்டில் பாத்திரத்தில் சேகரித்து வைக்க வேண்டும். இதைக் குளிர்சாதனப் பெட்டியில் கதவு திறந்து,மூடும் இடத்தில் வைக்கக் கூடாது. அதில் வெப்பநிலை குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

✤ அதனால் குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே வைக்க வேண்டும். காய்கறிகள் வைக்கும் இடத்தில் மேல் அறையில் வைக்கலாம்.

✤ குளிர்சாதனப் பெட்டியில் 4 டிகிரி செல்சியாஸ் 39 டிகிரி ஃபாரஹீட் வெப்பநிலையில் குளிர்சாதனப் பெட்டியில் செட் செய்ய வேண்டும்.

✤ குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கும் பாலை அப்படியே குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அதை அறை வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரில் வைத்து நன்றாகக் குளிர்ந்த தன்மை நீங்கி அறைவெப்பநிலைக்கு வந்த பிறகு குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.

✤ அறைவெப்பநிலையில் இருக்கும் பாலுடன் குளிர்ந்த சாதன பெட்டியிலிருந்து எடுத்த பாலை சேர்த்துப் பயன்படுத்தக் கூடாது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்