Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

What is Sologamy: தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், ஹனிமூன் வேறப் போறாங்களாம்......

Nandhinipriya Ganeshan June 02, 2022 & 15:55 [IST]
What is Sologamy:  தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், ஹனிமூன் வேறப் போறாங்களாம்......Representative Image.

Types of Marital Relationships: திருமண உறவு என்றால், ஒரு பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் காதலித்தோ அல்லது பலரின் முன்னிலையில் இருவரின் விருப்பத்தின் கீழ் ஒரு வாழ்க்கைப் பாதையில் சேர்த்து வைக்கும் ஒரு முறையாகும். ஆனால், இந்த திருமணத்திலேயே பல வகையான திருமண உறவுமுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவை பொறுத்த வரை இம்மாதிரியான திருமணங்கள் நடந்திருப்பது ரொம்பவே அரிதானதாக சொல்லப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால், இல்லை என்றே சொல்லலாம். 

இந்த ஒவ்வொரு திருமணத்திற்கும் அல்லது உறவுமுறைக்கும் ஒரு பெயர் உண்டு. இதையெல்லாம் பார்க்கும் பொழுது மனித இனம் எதை நோக்கி செல்கிறது என்றே சொல்வதற்கில்லை. இப்பதிவில் எத்தனை வகையான திருமணங்கள் இருக்கின்றன மற்றும் அந்த உறவு முறைகளுக்கான பெயர்களையும் விரிவாகப் பார்க்கலாம். இது உண்மையில் நம் உலகில் இப்படியெல்லாம் நடக்கிறதா, இல்லை நடக்குமா என உங்களை ஆர்ச்சரியத்திற்கு உள்ளாக்கலாம். வாங்க பார்க்கலாம்.  

மோனோகேமி உறவுமுறை

மோனோகமி (What is Monogamy in tamil) என்பது ஒரு ஆண், ஒரு பெண்ணை திருமணம் (ஒருதாரம்) செய்து கொண்டு வாழும் ஒரு உறவுமுறையாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், "ஒருவனுக்கு ஒருத்தி". இந்த உலகில் பெரும்பாலும் இந்த உறவுமுறை தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

பாலிமரி உறவுமுறை

பாலிமரி (What is Polyamory in tamil) என்பது ஒரு நபர் ஒரே நேரத்தில் பல நபர்களை நேசிப்பதாகும். அல்லது அவர்களுடன் ஒரே நேரத்தில் பல நபர்களை திருமணம் செய்து கொள்வதாகும். இந்த உறவுமுறையில் இருக்கும் நபர்கள் ஒரேபாலினராகவோ அல்லது இருபாலினராகவோ இருக்கலாம். 

சோலோகேமி உறவுமுறை

சோலோகேமி (What is Sologamy in tamil) என்பது ஒரு நபர், தன்னைத்தானே திருமணம் செய்துக் கொண்டு வாழும் முறையாகும். அதாவது, இந்த உறவுமுறையில், தனக்குத்தானே பொறுப்பேற்றுக்கொண்டு, தன் முழு அன்பையும் தனக்கே செலவிடுவது. ஆனால், இது ஒரு விசித்தரமான உறவுமுறையாக இருக்கிறது. சில சமயங்களில் நமக்கு சிரிப்பையும் வரவழைக்கிறது. இந்த மாதிரியான திருமண உறவுமுறையில் தான் பல வெளிநாட்டு நட்சத்திரங்களும், சாதாரண மக்களும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இதை சுருக்கமாக செல்ஃப் மேரேஜ் (Autogamy) என்றே சொல்லலாம். 

பாலிகேமி உறவுமுறை

பாலிகேமி (What is Polygamy in tamil) அல்லது பலதார மணம் என்பது ஒரு ஆண், ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்து கொண்டு உறுதியான உறவை மேற்கொள்ளும் ஒரு உறவுமுறையாகும். இந்த பலதாரமணத்தின் முறையீடு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மிகவும் ஒத்திருக்கிறது.

பாலிஜெனி உறவுமுறை

பாலிஜெனி (What is polygyny in tamil) என்பதும் ஒரு பலதார திருமணம் உறவுமுறைதான். ஆனால், இதில் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு. அதாவது, ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் கணவனைப் பகிர்ந்து கொள்ளும் திருமணம். இதுவும் கிட்டதட்ட பாலிகமி போன்று தான்.  

பிகேமி உறவுமுறை

பிகேமி (What is Bigamy in tamil) அல்லது இருதுணை மணம் என்பது, சட்டப்படி திருமணம் ஆன ஒருவர் இருக்கும்போது இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதாகும். ஆனால், இது பல நாடுகளில் சட்டப்படி குற்றமாகும்.

ஓரினச்சேர்க்கை உறவுமுறை

ஓரினச்சேர்க்கை (What is Homosexuality in tamil) என்பது ஒரே பாலினத்தவர் அதாவது ஆணும் ஆணும் (Male to Male Relationship) அல்லது (Female to Female Relationship) பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துக் கொண்டு வாழும் முறையாகும். ஆனால், இந்த உறவுமுறையை சில நாடுகளிலும் சமயங்களிலும் குற்றமாக கருதப்படுகிறது. இருந்தாலும், இதுவும் ஒருவிதமான அன்பு தான், ஒரு மனிதனுக்கு தன்மீது அன்பு காட்டும் நபர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களின் மீது அதிகளவிலான ஈர்ப்பு, பாசம், ஒரு விதமான அன்பு வருவது இயல்பான ஒரு விஷயம். அதுவே இப்படி ஒரு உறவு முறை உருவாக காரணமாகியுள்ளது. 

தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் குஜராத் பெண்

தற்போது இந்தியாவில் இந்த மாதிரியான ஒரு விநோத திருமணம் நடந்திருக்கிறது. குஜராத்தை சேர்ந்த 24 வயதான ஷமா பிந்து (Kshama Bindu) என்ற இளம்பெண் தன்னைத்தானே திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். இவருடைய திருமணம் தான் இன்று ட்ரெண்டிங் செய்தியாக இந்தியாவையே வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

குஜராத் வடோதரா (Gujarat women) பகுதியில் வசித்து வரும் இவர், திருமணம் முடிந்து வார இறுதியில் கோவாவிற்கு இரண்டு வாரம் தேனிலவு கொண்டாட செல்லவிருப்பதாகவும் கூறி இருக்கிறார். இது 90ஸ் -களின் மனதில் வருத்ததையும், நெட்டிசன்களுக்கு ஒரு காட்சி பொருளாகவும் சிக்கியுள்ளது. இம்மாதிரியான திருமணங்கள் பல நாடுகளில் இயல்பாக இருந்தாலும், இந்தியாவிற்கு மிகவும் புதிதான ஒன்றாக கருதப்படுகிறது. ஷமாவின் இந்த சுய ஏற்பு திருமணம் இந்தியாவிற்கு ஓர் ஆரமப்புள்ளியாக (India's First sologamy) அமைந்திருக்கிறது. இனி என்னவெல்லாம் நடக்குமோ.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்