Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இத்தனை நாள் இது தெரியாம போச்சே...இனி நைட் கண்டிப்பா நடக்கணும்…முக்கியமா நீங்க!

Priyanka Hochumin Updated:
இத்தனை நாள் இது தெரியாம போச்சே...இனி நைட் கண்டிப்பா நடக்கணும்…முக்கியமா நீங்க!Representative Image.

நாம் ஆரோக்கியமாக இருக்கும் காலகட்டத்தில் கண்டதை சாப்பிட்டு 30 வயது ஆன உடனே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய கோளாறு ஆகிய பல நோய்களால் அவதிப்படுகிறோம். எனவே, காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வோம். ஆனால் இரவு சாப்பிட்டு முடித்து விட்டு நடைப்பயிற்சி மேற்கொண்டால் உடல் எடை குறையும் என்று பலரும் நம்புகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று பாப்போம்.

நாம் உணவு சாப்பிடும் ஆரம்பித்து உணவு வயிற்றுக்குள் போகும் போதே செரிமானத்துக்கான திரவங்கள் சுரக்கத் தொடங்கி, ஜீரணத் தசைகளும் செயல்படத் தொடங்கிவிடும். ஆனால் சாப்பிட்ட உடனே தூங்க செல்வது, உடலுக்கு அசைவு தராமல் அப்படி உட்காந்து கொள்வது என்று இருந்தால் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். காரணம் வயிற்றுக்குள் இருக்கும் உணவிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவதால் தான். எனவே இரவு நேரங்களில் சாப்பிட்ட பின்பு சிறிது நேரம் நடப்பது செரிமானத்தை வேகமாக்க உதவும்.

நமக்கு வயது ஆக ஆக செரிமானம் கோளாறு ஏற்படுவது இயற்கை தான். எனவே தான் முதியவர்கள் இரவில் லைட்டான உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். அதுவே அவர்களுக்கு செரிமானம் ஆக கடினமாக இருக்கும். இரவு மட்டும் அல்ல மூன்று வேலையும் தான். எனவே, காலை, மாலை மற்றும் இரவு சாப்பிட்ட பின்பு 10 நிமிடங்கள் நடந்தால் செரிமானப் பிரச்சனை நீங்கும், உடல் எடை குறையும் மற்றும் எடையை சீராக வைத்திருக்க உதவும்.

மேலும் இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் என்று அனைவரும் உணவு எடுத்துக்கொண்ட பின்பு 10 நிமிடம் நடந்தால் செரிமானம் நன்றாக நடக்கும், மற்ற கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்