Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Diabetes and Amputation: சர்க்கரை நோயில் கால் உள்ளிட்ட உறுப்புகளை ஏன் அகற்றுகிறார்கள்? காரணத்த தெரிஞ்சிக் கோங்க...!!

Nandhinipriya Ganeshan June 23, 2022 & 17:30 [IST]
Diabetes and Amputation: சர்க்கரை நோயில் கால் உள்ளிட்ட உறுப்புகளை ஏன் அகற்றுகிறார்கள்? காரணத்த தெரிஞ்சிக் கோங்க...!!Representative Image.

How to Avoid Diabetes Foot Amputations: சர்க்கரை நோய் என்பது இன்றைய காலத்தில் சகஜமான ஒரு நோயாக மாறிவிட்டது. முன்பெல்லாம் இந்த நோய் ஒரு சிலருக்கு மட்டும் தான் இருந்தது, ஆனால் இப்போது இந்நோய் இல்லாதவர்கள் தான் ஒரு சிலர் இருக்கிறார்கள். வயசானாலே சர்க்கரை நோய் வந்துவிடும் என்பது எழுதப்படாத நியதி. அப்படி வயசானாலும் சர்க்கரை நோய் மற்றும் இரத்தம் அழுத்தம் இல்லை என்றால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. 

சர்க்கரை நோய்:

நமது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட அதிகமாவதே சர்க்கரை நோய். பல்வேறு காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாகிறது. இது சர்க்கரை இன்சுலின் அளவுடன் நின்றுவிடாமல் அது நரம்புகளையும், இரத்த ஓட்டத்தையும் சேர்த்தே பாதிப்பை விரிவுபடுத்துகிறது. இந்த பாதிப்புகள் பாதங்களுக்கும், சருமத்திற்கும் மோசமான கடுமையான சேதத்தை உண்டாக்குகின்றன. ஆனால், சர்க்கரை நோயை முறையான சிகிச்சைகளை பின்பற்றினால் இந்த பாதிப்பை தவிர்க்க முடியும். 

கால் உறுப்புகளை நீக்க காரணம்?

ஆனால், சர்க்கரை நோயாளிகள் உடல் ஆரோக்கியத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் 80% உறுப்பு துண்டிப்புகளுக்கு கால்களில் உருவாகும் புண்கள் தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படிபட்ட சூழ்நிலையில் கால்களின் புண்களை சரி செய்ய முடியாத பட்சத்தில் அதன் தீவிரம் அதிகரித்துக் கொண்டே போனால் கால்களை துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது.

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் உணர்ச்சி என்பது ரொம்பவே குறைவாக தான் இருக்கும். எனவே, எந்த வேலை செய்தாலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் புண்கள் சீக்கிரம் ஆறாமல், இறுதியில் உறுப்புகளை எடுக்க நேரிடும். 

காலில் புண் ஏற்படுவதை எப்படி தவிர்ப்பது?

* நகவெட்டிகளை பயன்படுத்தும் போது இரத்தம் வராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக கட்டைவிரலை பாதுகாப்பாக கையாள்வது அவசியம்.

* புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்திவிடுங்கள்.

* நல்ல தரமான காலணிகளை பயன்படுத்துங்கள். 

* தினமும் கால்களையும், பாதங்களையும் கழுவ வேண்டும். கழுவிய பிறகு துணிக் கொண்டு நன்றாக ஈரப்பதமின்றி துடைக்க வேண்டும். பின் மாய்ஸ்சரைசர் தடவுங்கள். கால்களை வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* தினமும் பாதம், கால், நகங்கள் போன்றவற்றை அடிக்கடி கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். சிவந்து போதல், தடிப்பு, கீரல்கள் போன்ற அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை அடிக்கடி சோதித்து கொண்டே இருக்க வேண்டும்.

* காலணிகள் இல்லாமல் ஒருபோது வெளியில் செல்ல கூடாது. வீட்டில் இருக்கும்போது செருப்பு போட்டுக் கொள்வது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்