Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Personality Test: உங்களுடைய கால் வடிவத்தை வைத்தே உங்களின் பர்சனாலிட்டிய தெரிஞ்சிக்கலாம்..!!

Nandhinipriya Ganeshan June 22, 2022 & 20:30 [IST]
Personality Test: உங்களுடைய கால் வடிவத்தை வைத்தே உங்களின் பர்சனாலிட்டிய தெரிஞ்சிக்கலாம்..!!Representative Image.

Foot Shape Personality Test: நம்மில் பலருக்கும் ஒவ்வொரு விதமான வடிவ அமைப்பில் கால் விரல்கள் இருக்கும். ஒரு சிலருக்கு ஐந்து விரல்களும் சமமான அளவில் இருக்கும், ஒரு சிலருக்கு பெருவிரல் மட்டும் நீளமாகவும், மற்ற விரல்கள் எல்லாம் படிக்கட்டுபோல் இருக்கும், ஒரு சிலருக்கு பெருவிரலுக்கு பக்கத்தில் இருக்கும் விரல் மட்டும் நீளமாக இருக்கும், இன்னும் சிலருக்கு முதல் மூன்று விரல்கள் மட்டும் ஒரே உயரத்தில் இருக்கும்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய கால் வடிவமே உங்களுடைய பர்சனாலிட்டி பற்றி சொல்லிவிடுமாம். வாங்க, உங்களுடைய காலின் வடிவத்தை பொறுத்து உங்களுடைய ஆளுமையை தெரிந்துக் கொள்ளலாம். 

ரோமானிய பாதம் | Roman Foot Shape Personality

ரோமானிய பாதத்தின் சிறப்பியல்பு முதல் மூன்று கால்விரல்கள் ஒரே நீளமாகவும், நான்காவது கால்விரல் சற்று குறியதாகவும், கடைசி கால்விரல் மிகக் குறியதாகவும் இருக்கும். அத்தகைய நபர் ஒரு சமநிலையான ஆளுமை கொண்டவர் மற்றும் மற்றவர்களுடன் மிகவும் எளிதாக பழகுவார்கள். 

உழவர் பாதம் | Peasant Foot Shape Personality

அனைத்து கால்விரல்களும் ஏறக்குறைய ஒரே நீளத்தில் இருக்கும் பாதம் உழவர் பாதம் என்று குறிப்பிடப்படுகிறது. ஒட்டுமொத்த பாதம் சதுர வடிவத்தை ஒத்திருப்பதால் இது ‘சதுர வடிவ பாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உழவர் பாதம் உள்ளவர்கள் இயல்பிலேயே அமைதியாக இருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் அவசர முடிவுகளை எடுக்க மாட்டார்கள்; அதுமட்டுமல்லாமல் அவர்கள் கவனமாக பரிசீலித்த பின்னரே எந்த முடிவுகளையும் எடுப்பார்கள்.


நீங்க இப்படி ஃபோனை பயன்படுத்துறீங்களா..? அப்ப உங்க பர்சனாலிட்டி இப்படி தான் இருக்கும்.... தெரிஞ்சிக்கோங்க...


கிரேக்க பாதம் | Greek Foot Shape Personality

பாதத்தின் முதல் விரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால், அது 'கிரேக்க பாதம்' என்று குறிப்பிடப்படுகிறது. கிரேக்க பாதம் கொண்டவர்கள் ஆக்கப்பூர்வமான மனதைக் கொண்டவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் எந்த சவால்களையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பார்கள்.

எகிப்திய பாதம் | Egyptian Foot Shape Personality

எகிப்திய பாதமானது முதல் கால்விரல் மிக நீளமானதாகவும், அடுத்தடுத்த கால்விரல்களின் நீளம் ஒரு இறங்கு வரிசையாகவும் மற்றும் கடைசி கால்விரல் மிகக் குறுகியதாக இருக்கும். அத்தகையவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ விரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல், விலையுயர்ந்த ஆடம்பர பொருட்களின் மீது அதிக ஈர்ப்பு இருக்கும். 


மூக்கில் இத்தன வகையா? உங்க மூக்கின் வகையை வைத்தே நீங்க இப்படிதா என்று கண்டுபிடித்துவிடலாம்….


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்... 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்