Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Celebrate Cousins Day 2022 in Tamil: ‘நேஷனல் கசின்ஸ் டே’ எப்படி கொண்டாடனும்னு தெரியுமா?

Nandhinipriya Ganeshan July 23, 2022 & 16:03 [IST]
How to Celebrate Cousins Day 2022 in Tamil: ‘நேஷனல் கசின்ஸ் டே’ எப்படி கொண்டாடனும்னு தெரியுமா?Representative Image.

How to Celebrate Cousins Day 2022 in Tamil: நம்மில் பலரும் கசின் என்பதற்கான அர்த்தம் தெரியாமல் அத்தை, மாமா பிள்ளைகளை மட்டும் தான் கசின் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி ஆகியோர்களின் பிள்ளைகளும் நமக்கு கசின் முறை தான். சரி, இந்த கசின்ஸ் டே எதுக்கு கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா? பொதுவாக, இவ்வுலகில் ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உறவினர்களுக்கிடையேயான சிறப்பு பிணைப்பை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதியை ‘நேஷனல் கசின்ஸ் டே’ அல்லது ‘தேசிய உறவினர் தினம்’ -ஆக கொண்டாடுகிறார்கள் நம் மக்கள்.

பெற்றோர் தினத்தில் பெற்றோரை மகிழ்வித்து அந்த நாளை கொண்டாடுகிறோம். அதேப்போல், சகோதரர்கள் தினத்தில் சகோதரர்களுக்கு கிப்ட்ஸ், ராக்கி என்று அவர்களை சந்தோசப்படுத்துகிறோம். அவ்வாறு, இந்த உறவினர்கள் தினத்தில் நம்முடைய குடும்ப உறுப்பினர்களுடன் நாம் கொண்டிருக்கும் நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை பரிசாக அனுப்பலாம், சமூக ஊடங்களில் பதிவேற்றி அவற்றை அவர்களோடு பகிர்ந்து மகிழலாம். உறவினர்கள் அனைவரையும் ஒன்றாக இணைந்து விருந்து ஏற்பாடு அதில் கலந்துக்கொள்ளலாம். அவர்களுடைய வீட்டுக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், எல்லோரும் ஒன்றாக கூடி கவலை அனைத்தையும் மறந்து குடும்பத்தில் நடந்த மகிழ்ச்சியான, ஆனந்தமான தருணங்களை நினைவுக்கூறி பேசி மகிழலாம். இது குடும்ப சண்டையால் பிரிந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்று சேர்க்கவும் நல்ல வாய்ப்பாக அமையலாம்.

Tags:

World cousins day 2022, Cousins day 2022 in india, International cousins day, How to celebrate cousins day in tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்