Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்..

Nandhinipriya Ganeshan October 31, 2022 & 23:00 [IST]
உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்..Representative Image.

உடலுறவு என்பது ஆணும் பெண்ணும் மனதளவில் இன்பத்தை அனுபவிக்கும் ஒரு இனிமையான தருணம். இந்த இன்ப தருணத்தை அனுபவிக்கும் முன்பு ஒவ்வொரு பெண்களும் ஒரு சில விஷயங்களை பின்பற்றி வந்தால், நிச்சயம் உறவில் முழுமையான ஆனந்ததை அடையலாம். சாதாரணமாகவே பெண்கள் தங்களது கணவரை கவருவதற்காக எத்தனையோ அடுக்கு மேக்கப்களை போட்டுக்கொள்வார்கள். ஆனால், உடலுறவில் ஈடுபடும் முன்பு கணவரை கவர என்ன செய்ய வேண்டும் என்று தெரிவது கிடையாது. ஆகவே, உங்க கணவரை கவர நீங்க பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு பிடித்தவர்களாக மாற ஆண்கள் இத மட்டும் ஒழுங்கா பண்ணுனா போதுமாம்... 

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்..Representative Image

பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்:

உடலுறவில் ஈடுபடும் முன்பு முக்கியமாக பற்களை துலக்கி விடுங்கள். காலையில் தானே துலக்கினேன் என்றால், இரவு படுக்க செல்வதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை பல்துலக்கினால் தவறேதும் இல்லையே. இது முத்தங்களை எந்த பிரச்சனையும் இன்றி பகிர்ந்துக்கொள்ள வசதியாக இருக்கும். 

அதேபோல், தூங்க உறவில் ஈடுபடுவதற்கு முன்பு குளித்துவிடுங்கள். ஏனென்றால், உடலில் துர்நாற்றம் வீசினால் உங்களின் மீதான ஈர்ப்பு கணவருக்கு குறைந்துவிடும். முடிந்தவரை தினமுமே இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு குளித்துவிடுங்கள். 

கர்ப்பம் தரிக்க தம்பதிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்...

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்..Representative Image

நல்ல மனநிலையை தூண்டும் விதமான வாசணைமிக்க இதமான பர்ஃப்யூம்களைப் பயன்படுத்துங்கள். ஏனென்றால், உங்க மீது நல்ல நறுமணம் வீசினாலே போதும், அதுவே உங்க கணவரை உங்கள் வசம்படுத்திவிடும்.

உடலுறவில் ஈடுபடும்போது சிறுநீர்ப்பை நிரம்பிய நிலையில் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். இதனால், இருவரது மனநிலையுமே மாறிவிடும். எனவே, தவறாமல் உறவில் ஈடுபடுவதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிடுங்கள்.

பெண்கள் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்..

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்..Representative Image

பெண்கள் குறிப்பாக நீளமான நகங்களை வளர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால், படுக்கையில் ரொமாண்டிக் மூடில் இருக்கும்போது, உங்க நகங்கல் துணையின் உடலில் சிராய்ப்புக்களை ஏற்படுத்தி காயங்களை உண்டாக்கிவிடும். பின்னர், அதுவே உங்க பாலியல் உறவை கெடுத்துவிடும். 

இதுதான் முக்கியமான விஷயம். உங்க கணவரை கவர படுக்கையறையில் உங்கள் தோற்றத்தை மேன்மேலும் கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும். அதற்காக, சென்ஸியான உள்ளாடைகளை அணிந்துக் கொள்ளுங்கள். 

கோபத்தை குறைப்பது (அ) கட்டுப்படுத்துவது எப்படி? இதோ சில எளிய வழிமுறைகள்...

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்..Representative Image

உறவில் ஈடுபடுவதற்கு முன்பு ஃபோனை ஆஃப் செய்துவிடுங்கள். இல்லாவிட்டால், முக்கியமான நேரத்தில் தேவையில்லாத மெசேஜஸ் அல்லது ஃபோன்கால்ஸ் வந்து உங்க மூடை (Mood) கெடுத்துவிடும். முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாது. 

மேலே கூறிய விஷயங்கள் பெண்களுக்கு மட்டுமின்றி, சில விஷயங்கள் ஆண்களுக்கும் பொருந்தும். எனவே, உங்க செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்று நினைத்தால் மேலே சொன்ன விஷயங்களை தவறாமல் பின்பற்றுங்கள். 

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்