Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டில் உள்ள கண்ணாடிகளை சுத்தம் செய்வது எப்படி | best tips to cleaning mirrors

Vaishnavi Subramani Updated:
வீட்டில் உள்ள கண்ணாடிகளை சுத்தம் செய்வது எப்படி |  best tips to cleaning mirrorsRepresentative Image.

பொதுவாக அனைத்து வீட்டிலும் கண்ணாடி வைத்து சன்னல்கள் அமைப்பது என்பது வழக்கமாக மாறிவருகிறது. அதைச் சுத்தம் செய்வது என்பது வெறும் தண்ணீரை வைத்துத் துடைப்பார்கள் அப்படிச்செய்தால் அப்பொழுது மட்டும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அடுத்த நாள் அந்த இடம் திட்டு திட்டாக இருக்கும். இதனால் அழுக்குகள் போகாது.  சிலர் சோப்பு தண்ணீர் வைத்துத் துடைப்பார்கள் அதுவும் நன்றாக அழுக்கு போகத் துடைத்து அரை மணிநேரத்தில் அந்த சோப்பு தண்ணீர் திட்டு திட்டாக இருக்கும். அதனால் இந்த பதிவில் வீட்டில் இருக்கும் கண்ணாடிகளைச் சுத்தம் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் உள்ள கண்ணாடிகளை சுத்தம் செய்வது எப்படி |  best tips to cleaning mirrorsRepresentative Image

வீட்டில் உள்ள கண்ணாடியைச் சுத்தம் செய்வது எப்படி

இந்த பதிவில் கண்ணாடி எப்படித் துடைப்பது மற்றும் துடைப்பதற்குப் பயன்படுத்தும் ஸ்பிரே எப்படித் தயார்செய்வது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

தண்ணீர் -1 கப்

வினிகர் -1கப்

ரப்பிங் ஆல்கஹால்- 1கப்

வீட்டில் உள்ள கண்ணாடிகளை சுத்தம் செய்வது எப்படி |  best tips to cleaning mirrorsRepresentative Image

கண்ணாடி சுத்தம் செய்வதற்கு ஸ்பிரே எப்படித் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது

ஒரு பாத்திரத்தில் வினிகர் ஒரு கப் அளவிற்கு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் ரப்பிங் ஆல்கஹால் சேர்த்துக் கலக்கிக் கொண்டு அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவேண்டும்.

நீங்கள் கண்ணாடியை சுத்தம் செய்வதற்கு முன்பாக, சிலவற்றைத் தெரிந்து கொள்ளவும். காலை அல்லது மாலையில் மட்டும் தான் கண்ணாடியைத் துடைக்கவேண்டும்.

மதியம் மற்றும் வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் கண்ணாடியைத் துடைக்கக் கூடாது. சூரிய வெளிச்சம் அதிகமாக இருந்தால் துடைத்த உடன் அந்த இடம் திட்டுதிட்டாக தண்ணீர் நிற்கும்.

உங்கள் கதவில் கண்ணாடியுடன் சேர்த்து மரத்தில் டிசைன் செய்து வைத்திருந்தால் அதைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு சிறிய குச்சியில் பஞ்சு அல்லது காது குடையும் பட்ஸ் எனப் பொருள்கள் பயன்படுத்தினால் எளிதில் சுத்தம் செய்ய முடியும்.

வீட்டில் உள்ள கண்ணாடிகளை சுத்தம் செய்வது எப்படி |  best tips to cleaning mirrorsRepresentative Image

முதலில் கதவில் இருக்கும் கண்ணாடிகளைத் துடைக்கும் போது மேல் இருந்து கீழ் நோக்கித் துடைப்பது நல்லது. இதனால் கண்ணாடிகளில் கோடுகள், கீறல்கள் இல்லாமல் இருக்கும்.

கண்ணாடியில் தயாரித்த ஸ்பிரேவை முதலில் அடித்து அதன் பின் காட்டன் துணி அல்லது ஸ்பாஞ் பயன்படுத்தித் துடைக்கலாம்.

கண்ணாடி துடைக்கும் முன்பாக, அதில் உள்ள மர வேலைப்பாடுகளைத் துடைத்த பிறகு, கண்ணாடியைத்  துடைத்தால்  முழுவதுமாக அழுக்குகள் சுத்தமாகும். கண்ணாடியைத் துடைத்த பிறகு, மர வேலைப்பாடுகளைத் துடைத்தால் அது கண்ணாடியின் மீது அழுக்குகள் ஏற்படுத்தும்.

கண்ணாடியைத் துடைக்கும் போது கண்ணாடி முழுவதும் ஸ்பிரே செய்த பிறகு, மேல் இருந்து கீழ் துடைத்தால் அழுக்குகள் முழுவதுமாக சுத்தமாகும்.

கண்ணாடி ஜன்னல் என்றால் அதைச் சுற்றி உள்ள பகுதிகளை முழுவதுமாக துடைத்த பிறகு, கண்ணாடியில் அழுக்குகள் படியும் அதை ஒரு துணியில் நன்றாகத் துடைத்த பிறகு, ஸ்பிரே செய்து துடைத்தால் மிகவும் எளிதாக அழுக்குகள் சுத்தம் ஆகும்.

கடைகளில் விற்கும் கிளனரை வாங்கி கூட பயன்படுத்தலாம்.அதையும் மேலே குறிப்பிட்டுள்ள முறைப்படி சுத்தம் செய்யவும். இந்த கலவையை உங்கள் வீட்டில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்