Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடிகாரத்தை வீட்டில் இந்த திசையில் வைத்து பாருங்க! பணம் கொட்டோ கொட்டோனு கொட்டும்.. | Clock Direction as Per Vastu

Gowthami Subramani Updated:
கடிகாரத்தை வீட்டில் இந்த திசையில் வைத்து பாருங்க! பணம் கொட்டோ கொட்டோனு கொட்டும்.. | Clock Direction as Per VastuRepresentative Image.

வாஸ்து, சாஸ்திர விதிமுறைகளின் படி, நாம் வீட்டை பாதுகாப்பாக எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என சில விஷயங்கள் உள்ளன. அவற்றில் கடிகாரத்தை வைத்தும் வாஸ்து சாஸ்திரங்கள் கூறப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம். வீட்டில் கடிகாரத்தை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதையும் இந்தப் பதிவில் காணலாம்.
 

கடிகாரத்தை வீட்டில் இந்த திசையில் வைத்து பாருங்க! பணம் கொட்டோ கொட்டோனு கொட்டும்.. | Clock Direction as Per VastuRepresentative Image

கடிகாரத்தை வைக்கும் திசை

பொதுவாக, வாஸ்து சாஸ்திர முறைகளின் படி, கடிகாரத்தை தெற்கு மற்றும் மேற்கு திசையில் வைக்கக் கூடாது எனக் கூறுவர். இவ்வாறு வைப்பதன் மூலம், எதிர்மறையான நிகழ்வுகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, கடிகாரத்தை வடக்கு அல்லது கிழக்குத் திசையில் வைப்பதே சரியாகும்.
 

கடிகாரத்தை வீட்டில் இந்த திசையில் வைத்து பாருங்க! பணம் கொட்டோ கொட்டோனு கொட்டும்.. | Clock Direction as Per VastuRepresentative Image

கடிகாரத்தின் நிறம்

வீட்டில் பொதுவாக அடர் நிறங்களில் பொருள்களை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அடர் நிறத்தில் உள்ள கடிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. எந்த நிறங்களாக இருப்பினும், அதில் வெளிர் நிறத்தில் கடிகாரத்தைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
 

கடிகாரத்தை வீட்டில் இந்த திசையில் வைத்து பாருங்க! பணம் கொட்டோ கொட்டோனு கொட்டும்.. | Clock Direction as Per VastuRepresentative Image

மறந்தும் செய்யக் கூடாதவை

வாஸ்து சாஸ்திர முறைகளின் படி, உடைந்து போன கடிகாரத்தை நம் வீட்டில் பயன்படுத்தக் கூடாது. அதே போல, நின்று போன ஓடாத கடிகாரத்தை பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதனை உடனே அகற்றி விடுவது என்பது அவசியம். ஏனெனில் எப்போதும் முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரமானது உடைந்து போனதாகவோ, அல்லது நின்று போய் ஓடாமல் இருப்பதாகவோ இருப்பது துரதிர்ஷ்டத்தை அடையாளம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது வீட்டில் உள்ள நல்ல நிலைமையையும் கெடுத்துவிடும் எனக் கூறப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இதில் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை எனக் கூறப்படவில்லை. இது குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், இது சம்பந்தப்பட்ட துறை நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.)
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்