Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி வாட்டர் பாட்டிலின் உள்பக்கத்தை ஈஸியாக சுத்தம் செய்யலாம்.. எப்படி? | Water Bottle Cleaning Tips in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இனி வாட்டர் பாட்டிலின் உள்பக்கத்தை ஈஸியாக சுத்தம் செய்யலாம்.. எப்படி? | Water Bottle Cleaning Tips in TamilRepresentative Image.

உடல் நீரேற்றமாக வைத்திருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதனால் அவ்வப்போது வீட்டில் இருக்கும் டம்ளர் அல்லது செம்பில் தண்ணீர் குடிப்போம். ஆனால் ஆஃபிஸ், ஸ்கூல் மற்றும் வெளியில் செல்லும்போது தண்ணீரை எடுத்துச் செல்வதற்காக வாட்டர் பாட்டிலை பயன்படுத்துவது வழக்கம். அப்படி தினமும் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்களை 2 நாட்களுக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால், வாட்டர் பாட்டிலில் கிருமிகள் தங்கி உடலில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம். 

ஆனால், நம்மில் பலரும் வாட்டர் பாட்டிலின் உள்பக்கத்தை கழுவதற்கு சலித்துக்கொண்டு மேலோட்டமாக கழுவிவிட்டு மீண்டும் பயன்படுத்தும். இது முற்றிலும் தவறானது. அதுமட்டுமல்லாமல், தற்போது கிடைக்கக்கூடிய பெரும்பாலான வாட்டர் பாட்டில்களின் தண்ணீர் அருந்தும் பகுதி மிகவும் சன்னமானதாக தான் இருக்கிறது. இதன் உள்பகுதியை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமானது. ஆனால், இனி வாட்டர் பாட்டில்களின் உள்பகுதியை ஈஸியாக சுத்தம் செய்ய முடியும். கீழே உள்ள டிப்ஸை முயற்சித்து பாருங்கள்.

வாட்டர் பாட்டிலின் உள்பக்கத்தை சுத்தம் செய்வது எப்படி?

டிப்ஸ் 1:

உங்கள் வாட்டர் பாட்டிலின் தண்ணீர் அருந்தும் பகுதி பெரியதாக இருந்தால் கழுவுவது மிகவும் எளிது. முதலில் பாட்டிலில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி, பின்னர் அதில் பாத்திரம் கழுவும் லிக்குவிட் (liquid) சில துளிகள் சேர்த்து கொள்ளவும். இப்போது அதை நன்றாக குலுக்கிவிட்டு 5 நிமிடம் கழித்து பாட்டில் கழுவும் பிரஷை வைத்து நன்றாக தேய்க்கவும். கீழ் பகுதி, சுற்றியுள்ள பகுதி மற்றும் மூடி ஆகியவற்றை நன்றாக தேய்த்து, பைப்பில் தண்ணீரை திறந்துவிட்டு நன்றாக குலுக்கி அலசவும். 4 அல்லது 5 முறை குலுக்கி அலசிவிட்டு, வெயில் படும் இடத்தில் காய வைத்து, மூடி போட்டு வைத்துவிடுங்கள்.

டிப்ஸ் 2:

ஒருவேளை உங்கள் வாட்டர் பாட்டிலின் தண்ணீர் அருந்தும்பகுதி சிறிதாக இருந்தால் ப்ளீச் மூலம் சுத்தம் செய்யலாம். அதற்கு வாட்டர் பாட்டிலில் சிறிதளவு பேக்கிங் சோடா போட்டு அதில் குளிர்ந்த தண்ணீரை முழுவதும் ஊற்றி, அதன் மூடியை மூடிபோட்டு நன்றாக குலுக்கவும். பின்னர், அதை அப்படியே இரவு முழுவதும் விட்டுவிட்டு, காலையில் எடுத்து அதேபோல் குலுக்கு ஓடும் தண்ணீரில் அலசிவிட்டு, வெயிலில் காய வைத்துவிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பாட்டிலில் இருக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் இறந்துவிடும். நோய்த்தொற்று பாதிப்பும் தவிர்க்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்