Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வீட்டில் மறந்தும் இந்த திசைகளில் காலணிகளை விடாதீர்கள்.! இல்லைன்னா எதிர்பாராத கஷ்டங்கள் தான் வரும்.. | Vastu Tips For Footwear

Gowthami Subramani Updated:
வீட்டில் மறந்தும் இந்த திசைகளில் காலணிகளை விடாதீர்கள்.! இல்லைன்னா எதிர்பாராத கஷ்டங்கள் தான் வரும்.. | Vastu Tips For FootwearRepresentative Image.

வீட்டில் உள்ள மூலைகள் வாஸ்து சாஸ்திரங்களின் படியே இருக்கும். அந்த வகையில் குபேர மூலையில் பீரோ வைப்பதன் மூலம் பொருளாதார மேம்பாடு அடையும் என்று கூறுவர். வாஸ்து சாஸ்திரங்களின் படி, காலணிகள் மற்றும் செருப்புகள் போன்றவற்றை வீட்டில் வைக்கக்கூடாத இடத்தில் வைப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் என்று கூறலாம். இதில், வீட்டின் எந்த திசையில் காலணி விடுவதால் பொருளாதா மேம்பாடு கிடைக்கும் மற்றும் வறுமை உண்டாகும் என்பதைக் காணலாம்.

வாஸ்து ஸ்தாத்திரம்

வீடு கட்டுவது முதல் வீட்டில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் பொருள்கள் அனைத்திற்கும் வாஸ்து முக்கியம் ஆகும். அதன் படி, வீட்டில் காலணி வைப்பது, மற்ற பொருள்களான காலண்டர், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கும் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது அத்தியாவசியமாக உள்ளது. இவ்வாறு வீட்டில் வைக்கப்படும் பொருள்கள் வைக்க வேண்டிய இடத்திற்கு மாறாக மற்ற இடங்களில் வைத்திருப்பது அபசகுமனமாக கருதப்படுகிறது. இதில், வீட்டில் செருப்பு, ஷூ உள்ளிட்டவற்றை கழற்றும் போதும், வைக்கும் போதும் என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் காணலாம்.

காலணி விட எத்திசை சரியானது?

வீடுகளில் எந்த இடமென்று எனக் கருதாமல் விருப்பத்திற்கேற்ற இடங்களில் காலணிகளை கழட்டி வைப்போம். வாஸ்து ஸ்தாத்திரங்களின் அடிப்படையில் வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைக்கக் கூடாது எனக் கூறப்படுகிறது. இவ்வாறு வைக்கும் போது இது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த திசைகளில் காலணிகளை விடும் போது, அன்னை லக்ஷ்மி கோபப்படுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், இதனால் வீட்டின் பொருளாதார நிலை குறைந்து வறுமையை அதிகரிக்கும். இதனால், குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடையலாம்.

சரியான திசை எது?

வாஸ்து சாஸ்திரங்களின் படி, செருப்பு, ஷூ உள்ளிட்டவற்றை வீட்டில் மேற்கு அல்லது தெற்கு திசையில் இருக்க வேண்டும். அதன் படி, வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும் போது, மேற்கு அல்லது தெற்கு திசையில் மட்டுமே செருப்ப்கள் மற்றும் காலணிகளை கழற்றி வைக்க வேண்டும். மேலும், வீட்டின் பிரதான வாசலில் செருப்புகளையும், காலணிகளையும் கழற்றவோ, வைக்கவோ கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மாற்று திசையில் வைத்தால்

இந்த வாஸ்து, சாஸ்திரங்களின் படி இல்லாமல் செருப்புகள் மற்றும் காலணிகளை மாற்று திசையில் வைக்கக் கூடாது. இவ்வாறு செய்யும் போது வீட்டில் எதிர்மறை ஆற்றலே அதிகரிக்கும். மேலும், இது குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கெடுப்பதாக அமையும். இதனால் ஷூ, செருப்புகள் உள்ளிட்டவற்றை மாற்று திசையில் வைக்கக் கூடாது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்