Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Control Sugar Level Naturally in Tamil: சர்க்கரை நோயை சமாளிப்பது எப்படி?

Nandhinipriya Ganeshan July 09, 2022 & 14:00 [IST]
How to Control Sugar Level Naturally in Tamil: சர்க்கரை நோயை சமாளிப்பது எப்படி?Representative Image.

Diabetes Diet: நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்பது நமது உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 180 மில்லிகிராம் சதவீதத்தைத் தாண்டும் நிலை ஆகும். இந்த நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் பார்க்கலாம். 

உணவு முறை:

❖ நேரம் தவறாமல் மூன்று வேளையும் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

❖ சப்பாத்தி, கோதுமை ரொட்டி, ஆரியம், அரிசி போன்ற கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க.

❖ அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். குறிப்பிட்ட டயட்டை பின்பற்றுங்கள்.

❖ வெல்லம், சர்க்கரை, ஜாம், தேன், சாக்லேட், கேக் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

❖ கொழுப்பு நிறைந்த உணவுகளான நெய், வெண்ணெய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோல், கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிங்க. மேலும், உணவில் தாவர எண்ணெயை பயன்படுத்துங்கள்.

❖ எண்ணெயில் பொறித்த பூசி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆக மொத்தம் பொறித்த உணவுகளை சாப்பிடவே கூடாது.

❖ அதற்கு பதிலாக நீராவியில் சமைத்த, வேக வைத்த, தீயில் வாட்டிய உணவுகளை சாப்பிடலாம்.

❖ கோழி, மீன், சீஸ் போன்ற உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சி:

❖ முதலில் உங்களுக்கேற்ற உடற்பயிற்சியை உங்க மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.  

❖ தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

❖ அதுமட்டுமல்லாமல், எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

❖ இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்ய கூடாது.

❖ வெறும் வயிற்றுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

❖ அதேபோல், இன்சுலின் ஊசிப் போட்ட உடனே உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

பிற ஆலோசனைகள்:

இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை குறைக்க உடற்பயிற்சி, உணவு முறை மட்டும் போதாது. சர்க்கரை அளவை குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை உங்க மருத்துவரிடம் ஆலோசித்து பின் கடைப்பிடியுங்கள்.

❖ அதேபோல், நோயின் தீவிரத்தன்மையை தவறாமல் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

❖ ஒரு சிலருக்கும் நோய் முற்றிவிட்டால், இன்சுலின் போட்டு கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். எனவே, தவறாமல் இன்சுலின் போட்டு கொள்வதும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்