Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Chocolate Cake at Home in Tamil: ஓவன் தேவையில்ல.. குக்கரிலேயே செய்யலாம் டேஸ்ட்டான பஞ்சுபோன்ற சாக்லேட் கேக்.. அதுவும் கொஞ்ச நேரத்துல..!!

Nandhinipriya Ganeshan July 07, 2022 & 16:15 [IST]
How to Make Chocolate Cake at Home in Tamil: ஓவன் தேவையில்ல.. குக்கரிலேயே செய்யலாம் டேஸ்ட்டான பஞ்சுபோன்ற சாக்லேட் கேக்.. அதுவும் கொஞ்ச நேரத்துல..!!Representative Image.

How to Make Chocolate Cake at Home in Tamil: சாக்லேட் கேக் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதனால், நம்மில் பலரும் அவ்வப்போது பேக்கரிக்கு சென்று வாங்கி சாப்பிடுவோம். ஆனால், சாக்லேட் கேக்கை நாம் வீட்டிலேயே செய்ய நினைத்தாலும் அதற்கு ஓவன் இருந்தால் தான் செய்ய முடியும் என்று விட்டுவிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் குக்கரே போதும் மென்மையான பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ஈசியாக செய்யலாம். இப்போது குக்கரில் சாக்லேட் கேக் செய்வது என்று ஸ்டெப் பை ஸ்டெப் பார்க்கலாம்.

Most Read: சுவையான சீதாப்பழத்தை வைத்து ஜில்லுனு ஒரு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க..!

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்

பேக்கிங் சோடா – 1¼ ஸ்பூன்

கோகோ பவுடர் – ¼ கப்

பட்டர் – ¼ கப்

சர்க்கரை – ¾ கப்

முட்டை – 2

பால் – ¼ கப்

வெண்ணிலா எசன்ஸ் – ½ ஸ்பூன்

6 இன்ச் கேக் பேன்

செய்முறை:

❖ ஒரு பாத்திரத்தில், மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சலித்து, கலந்து வைத்து கொள்ளுங்கள்.

❖ மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை முட்டையை கலக்க பயன்படுத்தும் கலக்கியை (whisk) கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். எலக்ட்ரிக் பீட்டர் இருந்தாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

Most Read: வாயில் வைத்ததும் கரையும் சூப்பரான புது ஸ்வீட் ரெசிபி..!

❖ இப்போது, அந்த கலவையில் முட்டையை உடைத்து ஊற்றி அதையும் கட்டிவிழாமல் நன்றாக அடித்துக்கொள்ளவும்.

❖ அதில் சிறிதளவு தண்ணீர், கோகோ பவுடர், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளுங்கள். பின், பால் சேர்த்து எல்லாப் பொருளும் கலக்கும் வரை மீண்டும் அடிக்கவும்.

❖ இப்போது நாம் கலந்து வைத்திருந்த மைதா மாவு கலவையை சேர்த்து ஸ்மூத் பேஸ்ட்டாக வரும் வரை அடித்துக் கொள்ளவும்.

❖ அவ்வளவு தான். இதை கேன் பேனில் ஊற்றிக் கொள்ளவும். இப்போது அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து அதன் நடுவில் ஸ்டாண்ட் ஒன்றை வைத்து குக்கரை மூடி விசில் போடாமல் 3 நிமிடங்கள் சூடேற்றவும்.

❖ பின்னர், மூடியை திறந்து கேட் பேனை அந்த ஸ்டாண்டின் மீது வைத்து குக்கரை மூடி, குறைந்த தீயில் 40 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

❖ 40 நிமிடங்களுக்கு பிறகு மூடியை திறந்து பல்குத்தும் குச்சியை கேக்கில் விட்டு பாருங்கள். கேக் ஒட்டாமல் வர வேண்டும். அப்படி ஒட்டினால், இன்னும் சிறிது நேரம் வேகவைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

❖ இப்போது, கேக் பேனை எடுத்து ஒரு தட்டில் மெதுவாக கவிழ்த்து, ஆற வைத்து வெட்டி பரிமாறவும்.

அவ்வளவு தாங்க..மென்மையான பஞ்சுபோன்ற சாக்லேட் கேட் ரெடி..! இதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுனும் சாப்பிடலாம். இனி கடைக்கு போய் கேட் வாங்கனும் அவசியமில்லை. நீங்களே செய்து கொள்ளலாம்.

Most Read: மாம்பழ சீசன் வந்தாச்சு.. ரெண்டே நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம் மாம்பழ கேக்!

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:

Chocolate cake recipe in tamil | Chocolate cake recipe in tamil withtout oven | How to make chocolate cake at home without egg | How to make chocolate cake without oven | Homemade chocolate cake recipe in tamil | Eggless chocolate cake recipe in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்