Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த அறிகுறி இருக்கா? அப்ப உங்களுக்கு சிறுநீரகக் கல் இருக்குதுனு அர்த்தம்.. | Kidney Stone Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த அறிகுறி இருக்கா? அப்ப உங்களுக்கு சிறுநீரகக் கல் இருக்குதுனு அர்த்தம்.. | Kidney Stone Symptoms in TamilRepresentative Image.

முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானோர் பாதிக்கப்படும் ஒரு பிரச்சனை கிட்னி ஸ்டோன் அல்லது சிறுநீரக கல். இது உடலில் மிகவும் மோசமான வலியை ஏற்படுத்தக்கூடியது. 

சிறுநீரக கல் என்றால் என்ன?

சிறுநீரில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் ஏற்படும் கற்களுக்கு 'சிறுநீரகக்கற்கள்' என்று பெயர். இவை சிறுநீர் பை, சிறுநீர் பாதை, சிறுநீரகம் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் உருவாகும். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும். 

சிறுநீரகக் கல்லின் வகைகள்:

சிறுநீரக கற்களில் முக்கியமாக நான்கு வகைகள் உள்ளன. 

வைட்டமின் டி அதிகமாக உட்கொள்ளுதல், சில பழங்கள், கொட்டைகள், காய்கறிகள் மற்றும் சாக்லேட்டில் கூட அதிக அளவு ஆக்சலேட்டுகள் உள்ளன. இவை உடலில் 'கால்சியம் கற்களை' உருவாக்குகின்றன. 

குறைவான திரவங்களை குடிப்பவர்கள் அல்லது கீல்வாதம் உள்ளவர்களுக்கு 'யூரிக் அமிலக் கற்களை' உருவாக்குகின்றன.

மரபணு ரீதியாக பாதிக்கப்படும் போது 'சிஸ்டைன் கற்கள்' உருவாகின்றன. சிறுநீரகங்கள் அதிக அளவு அமினோ அமிலங்களை வெளியேற்றும் போது அவை உருவாகின்றன. 

கடைசி வகை 'ஸ்ட்ரூவைட் கற்கள்'. இவை சில சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் காரணமாக உருவாகின்றன. 

எனவே, உங்களுக்கு எந்த வகையான கல் உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

இந்த அறிகுறி இருக்கா? அப்ப உங்களுக்கு சிறுநீரகக் கல் இருக்குதுனு அர்த்தம்.. | Kidney Stone Symptoms in TamilRepresentative Image

சிறுநீரக கல் அறிகுறிகள்:

பெரும்பாலான சமயங்களில் எந்த அறிகுறியும் இருக்காது. ஸ்கேன் எடுக்கும்போதுதான் தெரிய வரும். இருப்பினும், ஒரு சில அறிகுறிகளாலும் சிறுநீரகக் கல் இருப்பதை கண்டறியலாம். இந்த அறிகுறியானது கற்களின் அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்.

சிறுநீரகக் கல்லின் பொதுவான அறிகுறி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்தில் அல்லது அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். இது சுமார் 20-60 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது சில சமயங்களில் சிறுநீரில் இரத்தமும் வெளியேறலாம்.

பெண்களுக்கு சிறுநீரக கல் அறிகுறிகள்:

பெரும்பாலும் ஆண்களுக்கு தான் சிறுநீரகக் கல் ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால், பெண்களுக்கும் ஏற்படும். பெண்களுக்கு சிறுநீரகக் கல் இருந்தால், கீழ்க்காணும் அறிகுறிகள் ஏற்படும்.

முதுகு அல்லது வயிறு அல்லது இடுப்பில் கடுமையான வலி ஏற்படும். 

சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிதல் உணர்வு.

இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது.

சிறுநீரின் நிறங்களில் மாற்றம். அதாவது, சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக இருக்கும். 

சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்.

குமட்டல் உணர்வு மற்றும் வாந்தி ஆகியவையும் பெண்களுக்கு சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.

மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது முக்கியம். ஏனெனில் பெண்கள் குறிப்பிட்ட நிலையை புறக்கணித்தால், சிறுநீரகம் தொடர்பான வேறு சில பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்