Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Get Rid of Split Ends at Home: நுனி முடி வெடிச்சு இருக்கா? இத மட்டும் பண்ணுங்க.. வெடிப்பு காணாம போய்டும்..!!

Nandhinipriya Ganeshan June 21, 2022 & 15:45 [IST]
How to Get Rid of Split Ends at Home: நுனி முடி வெடிச்சு இருக்கா? இத மட்டும் பண்ணுங்க.. வெடிப்பு காணாம போய்டும்..!!Representative Image.

How to Get Rid of Split Ends at Home: நம் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையே முடி உதிர்வு. அதை சமாளிப்பதற்கே நம்மில் பலரும் என்னென்னமோ முயற்சிகளை செய்து வருகின்றோம். இந்த பிரச்சனை போதாதென்று சிலருக்கு தலைமுடியின் நுனியில் வெடித்து காணப்படும். ஆண்களை விட பெண்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் பாதிப்படைகிறார்கள். முடியின் நுனியில் வெடிப்பானது மன அழுத்தம், ஆரோக்கியமற்ற லைஃப்ஸ்டைல் பழக்கங்களால் ஏற்படுகிறது. 

முடி வெடிப்பால் முடியின் வளர்ச்சி தடைபடாது. இருந்தாலும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் அதன் தாக்கம் நுனியிலிருந்து வேர் வரை மேல்நோக்கி பரவ வாய்ப்புள்ளது. இதனால் முடி ஆரோக்கியமற்ற தோற்றத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே கொட்டி கொண்டிருக்கும் முடியின் அளவும் அதிகமாகும். எனவே, அது நுனியில் இருக்கும்போதே சரி செய்வது நல்லது. அவற்றை வீட்டில் உள்ள பொருட்களை (home remedies for split ends) கொண்டே சரி செய்துவிடலாம். 

தயிர்: தயிரில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் மட்டுமல்லாது இதர ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. உங்களுடைய முடியின் அளவை பொறுத்து தயிரை தலையில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டு மைல்டான ஷாம்பு போட்டு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். வெறுமனே தயிர் மட்டும் பயன்படுத்தினாலும் கூட அதில் ஒரு முட்டையின் வெள்ளை பகுதியை சேர்த்து தடவினால் இரட்டிப்பு பலன். 

அவகாடோ: அவகாடோ மற்றும் வாழை பழத்தை நன்றாக மசித்து, அதில் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்கு நன்றாக ஊற விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மைல்டான ஷாம்பு போட்டு தலையை அலசவும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் விரைவில் காணாமல் போகும். 

தேன்: சுத்தமான தேனுடன் எலுமிச்சை சாறு, பால், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஒன்றைக் கலந்து தலைக்கு தேய்த்து அரை மணி கழித்து தலைக்கு குளித்தால் தலைமுடி வறட்சி நீங்கும். அதேபோல், வெடித்த தலைமுடி முனைகளையும் சரி செய்யும். 

பாதாம் எண்ணெய்: 3 ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்ரும் 2 ஸ்பூன் அவகாடோ எண்ணெய் இரண்டையும் கலக்கி தலையில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்யவும். நுனி முடி வரை எண்ணெயை தடவும். 40 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டு தலை அலசவும். வாரம் ஒருமுறை தொடர்ந்து பின்பற்றவும்.  

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்