Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Beetroot Halwa in Tamil: நாலே பொருள் சுவையான பீட்ரூட் அல்வா ரெடி..!!

Nandhinipriya Ganeshan September 02, 2022 & 13:20 [IST]
How to Make Beetroot Halwa in Tamil: நாலே பொருள் சுவையான பீட்ரூட் அல்வா ரெடி..!!Representative Image.

How to Make Beetroot Halwa in Tamil: பொதுவாக, நம்மில் பலருக்கும் ஆரோக்கியம் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட சொன்னாலே 8 அடி தள்ளித்தான் நிற்போம். அதிலும் காய்கறி என்றால் சுத்தம். இதற்கு காரணம் உடலுக்கு சத்தான அனைத்து பொருட்களுமே அதிக சுவையை கொண்டிருப்பதில்லை என்பது தான். அப்படி பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை சாப்பிட மறுக்கும் காய்களில் ஒன்று தான் பீட்ரூட். 

இந்த காயில் எவ்வளவு நம்மைகள் இருக்கிறது என்பதை அனைவரும் கேட்டும், படித்தும் தெரிந்திருப்போம். இருப்பினும், பீட்ரூட்டை வெறுக்க காரணம் அதன் இனிப்பு கலந்த ஒருவிதமான சுவை தான். இதனாலையே, வீட்டில் அம்மாக்கள் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுக்கவே யோசிப்பார்கள். 

இனி யோசிக்கவே வேண்டியதில்லை. இந்த பீட்ரூட் ஜூஸ், சட்னி அல்லது பொரியலாக செய்வதைவிட மற்ற ஸ்டைலில் செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். அந்தவகையில், அல்வா முதலிடம். அல்வா என்றால் யாருக்குதான் பிடிக்காமல் இருக்கும். எனவே, பீட்ரூட்டை வைத்து அல்வா செய்துக் கொடுத்துப்பாருங்கள். நிச்சியம் வேண்டாம் என்றே சொல்லமாட்டார்கள். விருப்பமான சுவையில் ஆரோக்கியமான பீட்ரூட் அல்வா எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்.


மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகிர்தண்டா.. 


தேவையான பொருட்கள்:

முந்திரி பருப்பு - 10 

பீட்ரூட் - 1/2 கிலோ (துருவியது)

ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன்

உலர் திராட்சை - 3 ஸ்பூன்

பசும் பால் - 1 கப் (காய்ச்சியது)

சர்க்கரை - 1/2 கப் (சுவைக்கேற்ப)

நெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி திராட்சை மற்றும் முந்திரியை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர், அதே கடாயில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான சூட்டில் பீட்ரூட் துருவலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பீட்ரூட் ஓரளவு வதங்கியதும் 1 கப் காய்ச்சிய பாலை ஊற்றி பீட்ரூட்டை வேக வைக்க வேண்டும்.

பால் நன்றாக சுண்டியதும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பீட்ரூட் கடாயில் ஒட்டாமல் வந்தால், மீதியிருக்கும் நெய்யை ஊற்றி கிளறவும். பீட்ரூட் கடாயில் ஒட்டாமல் வந்தாலே அல்வா பதத்திற்கு வந்துவிட்டது என்று அர்த்தம்.

அந்த நேரத்தில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறிவிடுங்கள். கடைசியாக, நாம் எடுத்துவைத்துள்ள ஏலக்காய் பவுடரை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடுங்கள்.

அவ்வளவு தான்! சுவையான, ஆரோக்கியமான பீட்ரூட் அல்வா ரெடி. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், வீட்டில் முயற்சித்து பார்க்கலாமே.


தித்திக்கும் மாம்பழ அல்வா செய்வது எப்படி?


Beetroot halwa in tamil, beetroot halwa recipe in tamil, beetroot halwa with jaggery in tamil, how to make beetroot halwa in tamil, beetroot halwa recipe, how to prepare beetroot halwa in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்