Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Clove Oil for Hair at Home: இந்த ஒரு ஹேர் ஆயில் போதும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர….

Nandhinipriya Ganeshan June 07, 2022 & 19:50 [IST]
How to Make Clove Oil for Hair at Home: இந்த ஒரு ஹேர் ஆயில் போதும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர….Representative Image.

How to Make Clove Oil for Hair at Home in Tamil: நீளமான அடர்த்தியான முடியை யாருக்குத் தான் பிடிக்காமல் இருக்கும். ஆனால், இந்த காலத்து ஷாம்புக்களும், மாசுபாடும், உணவுப்பழக்கங்களும் இயற்கையாக வளர வேண்டிய முடியின் வளர்ச்சியை சீரழித்து விடுகின்றன. இந்த காலத்துல முடிக்கொட்டாமல் இருந்தாலே போது சாமி.. என்ற அளவு வந்தாச்சு. ஆனாலும் கூட சில சமயம் மனதிற்கு வருத்தமாக தான் இருக்கும். சில பெண்களின் நீளமான கூந்தலை பார்க்கும் பொழுது. 

அதற்காக நாமும் பல முயற்சிகளை செய்து சலித்தும் போயிருப்போம். இறுதியில் வேரு வேராக முடிக் கொட்டினது தான் மிச்சம். ரசாயனப் பொருட்களை தலையில் பயன்படுத்தும் வரையில் முடி வளர்ச்சியும் இருக்காது, முடி கொட்டி கொண்டே தான் இருக்கும்.

ஆனால், கவலை விடுங்க தேங்காய் எண்ணெய் உடன் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து, சூடு செய்து வாரத்திற்கு இருமுறை இந்த எண்ணெயை தலைக்குத் தடவி பிறகு தலைக்கு குளித்து வந்தால் முடி வளர்ச்சி நீங்க (Clove Oil for Hair growth)  நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு வளரும். 

இயற்கை ஹேர் ஆயில்:

50 கிராம் வெந்தயம், 15 கிராம்பு இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், குருணை இல்லாமல் சலித்து கொள்ள வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் 100 மில்லி சுத்தமான தேங்காய் அதாவது செக்கு எண்ணெய் ஊற்றி, அதோடு 2 டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர், மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, அந்த கொதிநீரின் மீது இந்த எண்ணெயை வைத்து சூடு செய்ய வேண்டும். 

இதில் நாம் அரைத்து வைத்த பொடியை கொட்டி 5-10 நிமிடங்கள் வரை சூடு செய்யுங்கள். இப்போது இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, இதை வடிக்கட்டக் கூடாது. இப்போது இந்த எண்ணெய் உங்களுடைய முடிக்கு பயன்படுத்த தயார். வாரம் இருமுறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்து 2 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து 15 நிமிடங்கள் ஊற வைத்து, ஷாம்பு கொண்டு தலைக்கு குளித்து விட வேண்டும். அதிகமாக ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். 

இப்படி செய்து வந்தால், முடி உதிர்தல் நின்று, நீளமான அடர்த்தியான முடி வளர ஆரம்பிக்கும். ஒருவேளை இந்த எண்ணெயை மேல்கூறியது போல் சூடு செய்ய வேண்டாம் என்று நினைத்தால், அந்த கிராம்பு,  வெந்தயம் கலந்த எண்ணெய்யை 10 நாட்கள் வெயிலில் காய வைத்து அதை தலையில் தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். 


30 நாட்களில் முடி நீளமாக வளர செய்யும் ஹோம் மேட் ஹேர் ஆயில்....!!! தயாரிப்பது எப்படி?

 


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்