Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Karuveppilai Chutney in Tamil: கறிவேப்பிலை சட்னிய இப்படி செஞ்சி பாருங்க..

Nandhinipriya Ganeshan August 04, 2022 & 18:15 [IST]
How to Make Karuveppilai Chutney in Tamil: கறிவேப்பிலை சட்னிய இப்படி செஞ்சி பாருங்க..Representative Image.

How to Make Curry Leaves Chutney in Tamil: அனைத்து தாய்மார்களுக்கும் தனது குடும்பத்திற்கு சத்தான உணவுகளை சமைத்து போட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அப்படி நினைக்கையில், என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து குழம்பி போய்விடுவார்கள். அதேவேளையில் சுவையாகவும் இருக்க வேண்டும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்காகவே, வீட்டில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சட்னி ரெசிபியை தான் பார்க்கப்போகிறோம். 

தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை - 1 கைப்பிடி அளவு

தேங்காய் - ½ கப் (துருவியது)

எள்ளு - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3-4 

இஞ்சி - சிறிதளவு

கொத்தமல்லி இலை - ½ கைப்பிடி அளவு

தக்காளி - 1

கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து எப்பவும் போல 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, காய்ந்த உடன் மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் போட்டு பச்சை வாசனை போகும் அளவிற்கு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், அதை ஒரு தட்டி கொட்டி ஆற வையுங்கள்.

அதே காடாயில் ¼ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தக்காளி பழத்தை போட்டு தொக்காக வதக்கி அந்த பொருட்களோடு சேர்த்து ஆற வைத்து, மிக்ஸி போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

ரொம்ப கட்டியாகவும் இல்லாமல், ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது, தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம், வர மிளகாய், கருவேப்பிலை போட்டு கருகாமல் தாளித்து அதை சட்னியில் கொட்டி கலந்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கறிவேப்பிலை சட்னி தயார். 

எப்பவும் கொத்தமல்லி, பொதினா, வெங்காய சட்னியே சாப்பிடாமல், இந்த மாதிரியும் செய்து பிள்ளைகளுக்கு கொடுப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகளை எதுவும் வராது. 

Tags:

How to make curry leaves chutney in tamil, How to make curry leaf chutney in tamil, Curry leaf chutney in tamil, Curry leaves chutney recipes in tamil, Karuveppilai chutney benefits in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்