Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Egg White or Yellow Which is Good: முட்டையின் வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு – எது சிறந்தது?

Nandhinipriya Ganeshan August 03, 2022 & 19:00 [IST]
Egg White or Yellow Which is Good: முட்டையின் வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு – எது சிறந்தது?Representative Image.

Egg White or Yellow Which is Good: ஒரு முட்டையின் எந்தப் பகுதியில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். இப்போது அதற்கான பதிலை தான் பார்க்கப்போகிறோம். முட்டையின் வெள்ளைக்கருவில் ஜீரோ கொழுப்பு (0 கொலஸ்ட்ரால்) உள்ளது, அதிக புரதம் (3.6 கிராம் புரதம்) மற்றும் மிகக் குறைந்த கலோரிகள் (16 கலோரிகள்) உள்ளன. இது நம் உடலால் உற்பத்தி செய்ய முடியாத அமினோ அமிலங்களையும் வழங்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல், முட்டையின் வெள்ளைக்கரு சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.

முட்டையின் மஞ்சள் கரு இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், தியாமின், பாந்தோத்தேனிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி6 & பி12 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். கால்சியம், தாமிரம், மாங்கனீசு போன்றவையும் இதில் உள்ளது.

ஒரு பெரிய முட்டையின் ஊட்டச்சத்து கலவையானது முட்டையின் வெள்ளைக்கரு கொழுப்பு இல்லாதது மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது, அதேசமயம் முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு இரண்டிலும் புரதம் உள்ளது. இருப்பினும், மஞ்சள் கருவை விட வெள்ளைக்கருவில் புரதம் (egg white benefits in tamil) சற்று அதிகம். எனவே, வெள்ளைக்கருவே நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்